Asianet News TamilAsianet News Tamil

ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல்...!! இசட் பிளஸ் பாதுகாப்பு விவகாரத்தில், பீதி கிளப்பிய வைகோ...!!!

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு  பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

mdmk general secretary vaiko  condemned for z plus protection get back for stalin
Author
Chennai, First Published Jan 10, 2020, 6:50 PM IST

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு  இசட் பிரிவு பாதுகாப்பு  நீக்கப்பட்டதில்   அதிமுக பாஜக ஆகிய கட்சிகளின் சதி இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் .  முன்னாள் முதல்வர்கள் மற்றும் அரசியல் முக்கிய தலைவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு  வந்தது ,  இந்நிலையில் தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க ஸ்டாலின் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கி வந்த மத்திய பாதுகாப்பு படை வீரர்களை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.  இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளிவந்தன ,  துணை முதலமைச்சர் ஓ .பன்னீர் செல்வத்திற்கு Y பிளஸ் பாதுகாப்பும்,   அதேபோல்  திமுக தலைவர் ஸ்டாலினுக்கு Zபிளஸ் பாதுகாப்பும்  வழங்கப்பட்டிருந்தது . 

mdmk general secretary vaiko  condemned for z plus protection get back for stalin

அதாவது மத்திய ரிசர்வ் போலீஸ் படை பிரிவைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து  வந்தனர் நாட்டில் இப்படி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய  பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது .  இதில் கடந்த 6ஆம்  தேதி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு  எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவரது பாதுகாப்பை விலக்கிக் கொள்ளப்பட்டது .  அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இசட் பிரிவு பாதுகாப்பு அவசியம் இல்லை என தெரியவந்ததையடுத்து  அவருடைய பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது,  மேலும் அதற்கு இணையாக பாதுகாப்பு தமிழக போலீஸ் சார்பில் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது .  திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு  பாதுகாப்பு விலக்கப்பட்டது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .

mdmk general secretary vaiko  condemned for z plus protection get back for stalin

இந்நிலையில் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள வைகோ,   தமிழகத்தில் பெரியார் அண்ணா ஆகியோரின் லட்சங்களுக்கு எதிராகவும் திராவிடத்துக்கு  எதிராகவும்  திட்டமிட்டு பரப்பப்படும் கருத்துக்களை  திமுக தலைவர் ஸ்டாலினே சரியாக எதிர்கொண்டு வருகிறார் .  இதனால் அவருக்கு மக்கள் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன .  பெரியார் சிலை உடைப்பு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகள் நடந்து வருகிறது,  திராவிட இயக்கத்திற்கும் அதன் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழலில்  திமுக தலைவர் மு. க ஸ்டாலின் அவர்களுக்கு உயர்மட்ட பாதுகாப்பு தொடர்வதே நியாயம் , ஆனால் இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொண்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது .  மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கிய  பாதுகாப்பை சதி செய்து நீக்கியுள்ளனர்  என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார் .

Follow Us:
Download App:
  • android
  • ios