தே.மு.தி.க.,வுடன், 2016 சட்டசபை தேர்தலில், கூட்டணி அமைக்க, தி.மு.க., விரும்பியது. இதற்காக, பல தரப்பிலும் காய் நகர்த்தப்பட்டது. ஆனால், மக்கள் நலக் கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெற்றது. வைகோ, திருமாவளவன் விஜயகாந்த்தை முதல்வராக்க தேமுதிக.,வை, மக்கள் நல கூட்டணியில் சேர்த்தனர். 

அந்த தேர்தலில், திமுக தலையில் கை வைத்ததால் அதிமுக ஆட்சி அமைக்க, மக்கள் நல கூட்டணி மறைமுகமாக  ரூட்டு போட்டு கொடுத்தது அம்பலமானது. ஜஸ்ட்மிஸ்ஸில் ஆட்சியை பிடிக்க முடியாத சோகத்திற்கு மூழ்கியது திமுக.

இந்த மேட்டர் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில், கேப்டனை கோயம்பேட்டில் தவிக்கவிட்டு விட்டு அப்படியே, தேனாம்பேட்டை பஸ் பிடித்து அறிவாலயம் வந்து சேர்ந்த அவர்கள்  திமுக தலைவர் ஸ்டாலினை, முதல்வராக்கப் போவதாக,  பிளான் போட்டுள்ளனர். (இந்த மேட்டர் இப்படி பொய் கொண்டிருக்கையில் கமல் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்னாள் கேப்டன் விஜயகாந்த்தை சந்திக்கையில், அரசியலில் யாரையும் நம்ப வேண்டாம் உங்களை முதல்வராக்குவோம் என உசுப்பேத்தி விடுவார்கள் ஜாக்கிரதை என எச்சரித்து அனுப்பியது வேற கதை)  

இப்படி ஸ்டாலினை முதல்வராக்குவதா வாக்கு கொடுத்து விட்டு திமுக கூட்டணியில் இடம்பிடித்து விட வேண்டும் என, வைகோவும், திருமாவளவனும் குடுமிப்பிடி சண்டை போட்டு விட்டு இப்போது ராசியாகி விட்டனர். 

ஆனால் ஸ்டாலின்  இவர்களை விடாமல் அசிங்கப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது, இதை சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது. ஸ்டாலினின் இந்த ரிவெஞ் மதிமுக விசிக தொண்டர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, ம.தி.மு.க., - வி.சி., கட்சியினர்  கூட்டணி தொடர்பாக, துரைமுருகன் வைகோவை தொலைக்காட்சியில் வச்சு செய்ததை   ஸ்டாலின்  கண்டுக்கவே இல்லை. அதுமட்டுமல்ல அறிவாலயத்துக்கு வந்த வைகோவை வாசல்வரை வந்து கண்டமேனிக்கு கலாய்த்து அனுப்பியது என இவங்க அளப்பறைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.  

அதோட முடியவில்லை வைகோ மற்றும் திருமாவளவன் இடையே, கருத்து மோதல் ஏற்பட்டது. நட்பு கட்சிகள் என்ற முறையில், இந்த பிரச்னையை பேசி தீர்க்கவும், ஸ்டாலின் முயற்சிக்கவில்லை. வேறு வழியில்லாமல் அவர்களாகவே  சமாதானம் ஆனார்கள். 

இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழா கூட்டத்தில், வைகோ, திருமாவளவன் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், உரிய முக்கியத்துவம் அளிக்காமல், மேடைக்கு எதிரே அமர வைக்கப்பட்டனர். அதிர்ச்சி அடைந்த வைகோவும், திருமாவளவனும், அதை வெளிக்காட்டவில்லை. அதேநேரத்தில், டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் போன்ற கம்யூ., தலைவர்களுக்கு, மேடையில் இடம் வழங்கப்பட்டது. இதன் வாயிலாக, பழைய தோல்விகளுக்கு பழிவாங்க, இந்த நடவடிக்கைகளை, ஸ்டாலின் எடுக்கிறாரா என்ற, சந்தேகம்  உள்ளதாக புலம்புகிறார்கள்.