விவசாயிகள் வறட்சியால் இறக்கவில்லை அது எதிர்கட்சிகள் சதி என்று அமைச்சர் சம்பத் கூறியுள்ள கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.
அமைச்சர் எம்சி சம்பத் கடலூரில் ஆய்வு செய்தார் .அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கடலூரில் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளார்களே என்று கேட்ட போது அப்படியெல்லாம் ஒன்றுமில்லைங்க விவசாயிகள் மரணத்துக்கு இதெல்லாம் காரணமில்லைங்க .
உடல் உபாதை , வயோதிகம் , நோய் பாதிப்பினால் இயற்கையாக இறந்திருக்கிறார்கள் , இது எதிர்கட்சிகள் சதி என்று கூறினார்.
வறட்சியால் யாரும் உயிரிழக்கவில்லை எதிர்கட்சிகள் சதிதான் என்கிறீர்களா என்று செய்தியாளர்கள் மீண்டும் கேட்டவுடன் ஆமாம் அது இயற்கையான உடல் உபாதைகளால் நடந்த உயிரிழப்புகள் தான் இது எதிர்கட்சிகள் சதி என்று அழுத்தமாக தெரிவித்தார்.
இதே கருத்தை அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனும் தனது ஆய்வு பயணத்தின் போது தெரிவித்துள்ளார்.
100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர்கள் வாடுவதை பார்த்து மனம் வெதும்பி உயிர் விட்டதையும், தற்கொலை செய்து கொண்டதையும் பார்த்து நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது.
எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வரும் நிலையில் அமைச்சர்களின் பேச்சு பெரும் எதிர்ப்பை கிளப்பி உள்ளது.
விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை: விவசாயிகள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்ததாக அமைச்சர் சம்பத் பேசியதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார். வறட்சி பாதிப்பால் விவசாயிகள் உயிரிழந்ததை அமைச்சர் சம்பத் கொச்சைப்படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST