மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால், மாயாவதியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள்.

By; T.Balamurukan

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 மின்சாரக் கட்டணம் செலுத்தாதல், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் வீட்டில் இன்று மின் இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் துண்டித்தனர். இச்செய்தி வலைதளத்தில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

 மேற்கு வங்காலத்தில்,கிரேட்டர் நொய்டாவின் பதல்பூர் பகுதியில் உள்ளது மாயாவதியின் வீடு.ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால், மாயாவதியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். உடனடியாக, மாயாவதியின் குடும்பத்தினர் ரூ.50 ஆயிரத்தை செலுத்தியதால், அவரது வீட்டுக்கு மீண்டும் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது.

 இந்த சம்பவத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. எங்கெல்லாம் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதோ அந்த வீடு மற்றும் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணியை மின் வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் தான் மாயாவதியின் வீட்டிலும் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. பணம் செலுத்தப்பட்டதை அடுத்து, மின் இணைப்பு வழங்கப்பட்டது என்று மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல அரசியல் கட்சி தலைவர்கள்,அமைச்சர்கள் வீடுகளில் மின்சாரக்கட்டணம், டெலிப்போன் கட்டணம் செலுத்தாதவர்கள் பட்டியல் எடுத்தால் எத்தனை பேர் வீடுகளுக்கு கட் பண்ண வேண்டுமோ..?