தமிழக அரசு தம் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன் என கொடநாடு விவகாரத்தில் பகீர் கிளப்பிய தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தம் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன் என கொடநாடு விவகாரத்தில் பகீர் கிளப்பிய தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என எடப்பாடி தெரிவிக்க வேண்டும். தமிழக அரசு தம்மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருக்கிறேன்’’ என அவர் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி மீது கொடநாட்டில் கொள்ளை மற்றும் கொலை குற்றம்சாட்டிய மேத்யூ சாமுவேல் சென்னை வருவதாக நேற்றே முகநூல் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அதில், ‘எடப்பாடி என்கிற கோலியாத்துடன் டேவிட் மோதும் நிகழ்வு இது’ என மேத்யூ பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் மேத்யூ சென்னைக்குள் வந்தால் கலவரம் ஏற்படும் என அவரை கைது செய்ய சென்னை மாநகர காவல்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் மேத்யூ தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னை வந்துள்ள மேத்யூ சாமுவேல் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 23, 2019, 12:37 PM IST