ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்... 50க்கும் மேற்பட்ட மார்க். கம்யூ. கட்சியினர் கைது!!
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆளுநரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் நீலகிரியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தார்.
இதையும் படிங்க: முதலில் சீமான்.. அடுத்து எடப்பாடி பழனிசாமி.. அடுத்தடுத்து வழக்குப்பதிவால் அதிர்ச்சி - கவலையில் தொண்டர்கள் !!
அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் விமான நிலைய நுழைவாயில் முன்பு கைகளில் கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: வடமாநில தொழிலாளர்கள் குறித்த சர்ச்சை.. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில் போலீசார் 50 மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் கோவை விமான நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.