Asianet News TamilAsianet News Tamil

திமுக கூட்டணியில் 2 தொகுதிகள்... இழுத்து பறித்து பெற்ற மற்றொரு கட்சி..!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில் மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.

marxist communist 2 seat
Author
Tamil Nadu, First Published Mar 5, 2019, 12:24 PM IST

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி பங்கீட்டு உடன்பாட்டில் மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டணி குறித்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கிய உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டார். marxist communist 2 seat

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் 2 தொகுதிகள் திமுகவுடன் உடன்பாடு எற்பட்டுள்ளது. தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணியை வீழ்த்த வேண்டிய தேவை இருப்பதால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்மதித்தது. மக்களவை தேர்தலோடு 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வந்தாலும் திமுகவுக்கு ஆதரவு என்றார். தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் எது என்பதை முடிவு செய்த பிறகு அறிக்கப்படும்’ என அவர் தெரிவித்தார். marxist communist 2 seat

தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளும், இது தவிர, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனுக்கு தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் வகையில் ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகளை மட்டுமே திமுக ஒதுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன. இன்று மதிமுக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு  உடன்பாடு எட்டப்படும் என தெரிவிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios