Asianet News TamilAsianet News Tamil

நமது அம்மா நாளிதழில் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்!வெறுப்பில் பதவியை தூக்கி எறிந்த மருது அழகுராஜ்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நமது அம்மா நாளிதழ் பத்திரிக்கை ஆசிரியர் பதவியில் இருந்து மருது அலகுராஜ் விலகியுள்ளார்.

Maruthu Alakuraj has resigned as the editor of Namathu Amma newspaper
Author
Chennai, First Published Jun 29, 2022, 12:43 PM IST

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் தொடர் பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. அதிகாரம் மற்றும் பதவி போட்டியின் காரணமாக இரும்பு கோட்டையாக இருந்த அதிமுக தற்போது 3 ஆக பிளவு பட்டுள்ளது. ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் இருந்து ஒதுக்கியதால் தென் மாவட்டத்தில் வாக்குகள் சிதறும் நிலை ஏற்பட்டு சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் அதிமுக தோல்வியை அடைந்தது. தற்பொழுது ஓபிஎஸ் தனியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால்  தென் மாவட்டங்களில் வாக்குகள் அதிமுகவில் இருந்து 3 ஆக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு வெற்றி  வாய்ப்பு எளியதாக அமைந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தமிழகத்தில் அதிக வாக்கு சதவிகிதத்தை கொண்ட கட்சியாக அதிமுக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்பட்ட பிளவால் மோசமான நிலைக்கு அதிமுக தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இருக்கிற பிரச்சினையில இது வேற.. தொடர்ந்து தொல்லை கொடுக்கும் புகழேந்தி.. கடுப்பாகும் எடப்பாடியார்..!

Maruthu Alakuraj has resigned as the editor of Namathu Amma newspaper

நமது அம்மா நிறுவனர் ஓபிஎஸ் நீக்கம்

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்த நமது எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயா டிவி சசிகலாவின்  கைக்கு சென்றதால், புதிதாக கடந்த 2018 ஆம் ஆண்டு நமது அம்மா மற்றும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியை அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடங்கினர். இதனையடுத்து நமது அம்மா நாளிதழ் நிறுவனர்களாக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயர் இருந்து வந்தது. இந்தநிலையில் தற்போது ஏற்பட்ட பிரச்சனையால் நமது அம்மா நாளிதழ் நிறுவனர் பெயரில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் பெயர் நீக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில்க ஓபிஎஸ் பெயர் முதல் கட்டமாக நாளிதழில் இருந்து நீக்கப்பட்டதாகவும், விரைவில் அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவார் என கூறப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சசிகலா வருகிறார? இது என்ன புது டுவிஸ்டா இருக்கு

Maruthu Alakuraj has resigned as the editor of Namathu Amma newspaper

பதவி விலகிய மருது அழகுராஜ்

இந்தநிலையில் நமது அம்மா பத்திரிக்கை தொடங்கியதில் இருந்து  ஆசிரியராக செயல்பட்டு வந்த மருது அழகு ராஜ் இன்று தனது பதவியில் இருந்து விலகுவதாக டுவிட்டர் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்  நதிகாக்கும் இரு கரைகள்  என்னும் என் போன்றோரது நம்பிக்கை சுயநலத்தால் தகர்ந்து விட்ட நிலையில் நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இவர் கடந்த சட்ட மன்ற தேர்தலில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மருது அழகுராஜ் ஓபிஎஸ் ஆதரவாளராக அறியப்பட்டவர், இவரும் ஓ.பன்னீர் செல்வமும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.,இந்தநிலையில் மருது அழகு ராஜ்க்கு இபிஎஸ் தரப்பில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே நமது அம்மா பத்திரிக்கையின் ஆசிரியர் பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி கொடுத்த வைத்தியலிங்கம்..!

 

Follow Us:
Download App:
  • android
  • ios