Asianet News TamilAsianet News Tamil

இருக்கிற பிரச்சினையில இது வேற.. தொடர்ந்து தொல்லை கொடுக்கும் புகழேந்தி.. கடுப்பாகும் எடப்பாடியார்..!

கர்நாடகா மாநில அதிமுக செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்த புகழேந்தி பாமகவை விமர்சித்ததன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் ஒருமித்து உத்தரவிட்டிருந்தனர்.

Defamation case against OPS, EPS.. pugazhendhi appeals to Supreme Court
Author
Delhi, First Published Jun 29, 2022, 11:26 AM IST

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி புகழேந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநில அதிமுக செயலாளராகவும், செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்த புகழேந்தி பாமகவை விமர்சித்ததன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம் அதிமுகவில் இருந்து நீக்கி அதிமுக  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி  பழனிசாமி ஆகியோர் ஒருமித்து உத்தரவிட்டிருந்தனர்.

இதையும் படிங்க;- இப்படி இழுத்தடித்து ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? முதல்வர் ஸ்டாலினை வச்சு செய்யும் டிடிவி.தினகரன்..!

இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமிக்கு சுத்துபோடும் ஓபிஎஸ்.. திரும்பிய பக்கமெல்லாம் செக்?

Defamation case against OPS, EPS.. pugazhendhi appeals to Supreme Court

இதை எதிர்த்து புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி,  எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்சுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து  இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பு சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த  நீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்பின் வாதங்களை  ஏற்பதாகவும், நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தலைமைக்கு முழு அதிகாரம்  இருப்பதாகவும் தெரிவித்தது. மேலும் புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையும் படிங்க;- ஆயிரம் சண்முகம் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது.. இனிமே தான் ஓபிஎஸ் ஆட்டமே இருக்கு.. கோவை செல்வராஜ்.!

Defamation case against OPS, EPS.. pugazhendhi appeals to Supreme Court

இந்நிலையில் புகழேந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.  அதில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மீது எம்பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்த  சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios