கொரோனா உலகம் முழுவதும் கோரதாண்டவமாடி வரும் நிலையில், ’ஏண்டா பா 40 வருஷம் கழிச்சி அத்தி வரதர் மேல வரதால நல்லது நடக்கும்னு சொல்லிட்டு திரிஞ்சவனுங்கள யாராச்சும் பார்த்தீக? என  திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் கருத்து தெரிவித்து இருந்தார்.

கொரோனா பேரழிவு இந்தியா மட்டுமல்லாது இஸ்லாமிய தேசம், கிறிஸ்தவர் மத வழிபாட்டினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தினர் வாழும் தேசங்களிலும் பாகுபாடின்றி படுத்தி எடுத்து வருகிறது. இந்நிலையில், சுபவீ இந்துக்கடவுளை இந்த விஷயத்தில்  அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இழிவு செய்யும் வகையில் அத்தி வரதரை குறி வைத்து விமர்சித்து இருந்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நமது அம்மா நாளிதழ் ஆசிரியரும், அதிமுக செய்தித்தொடர்பாளருமான மருது அழகுராஜ் சுபவீக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’மருத்துவத்தில் நம்மை விட பன்மடங்கு முன்னேறிய அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் சவப்பெட்டி கிடைக்காத அளவுக்கு ஏற்பட்டிருக்கும் கொரோனா பேரழிவு இங்கே இல்லை என்பதோடு, இந்தியாவிடம் உலகம் மருந்துகளுக்கு கையேந்துகிறது என்றால் அதனை அத்திவரதர் அருளாசி என எடுத்துக்கொள்கிறோம்..!

 

இன்னும் விரிவான விளக்கம் வேண்டுமானால், மூன்று தெரு தாண்டிச்சென்று அத்திவரதரை தரிசித்து வந்த துர்கா ஸ்டாலினிடமும் அவரது சின்ன மாமியார் ராசாத்தியிடமும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே’’ என தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது ட்விட்டர் பக்கத்தில், ’’உண்மையில் தைரியம் இருந்தா டில்லி மர்க்கஸில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவுடன் கமல்ஹாசன் பட ஸ்டைலில் கட்டிபடி வைத்தியம் செய்து சமூக நல்லிணக்கத்தை நிரூபித்த உடன் அத்திவரதரைப் பார்த்தவரை நான் காட்டுகிறேன்.’’ எனக்கூறியுள்ளார்.