Asianet News TamilAsianet News Tamil

திருநங்கைக்கும் திருநம்பிக்கும் திருமணம்...சென்னையில் ஓர் சுயமரியாதைத் கல்யாணம்...

Marriage to Thirunangai and Tirunanka A self respecting marriage in Chennai
Marriage to Thirunangai and Tirunanka A self respecting marriage in Chennai
Author
First Published Mar 14, 2018, 2:10 PM IST


திருமணம் செய்துகொள்ளும்போது அது கவனிக்கத்தக்க வகையில் நடைபெற வேண்டும் என்ற விருப்பம் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் முறியடிக்கும் விதமாக இதுவரை யாரும் அறியாத ஒரு திருமணம் சென்னையில் இந்த மகளிர் தினத்தன்று, எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி, எந்த முன்னறிவிப்பும் இன்றி நடந்தது.

இந்த திருமணம் காலையில் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு மதியம் எளிய முறையில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பல கவனிக்கத்தகுந்த பல அம்சங்கள் இருக்கின்றன. சாதி மறுப்புத் திருமணமாகவும், சடங்கு மறுப்புத் திருமணமாகவும் நடைபெற்ற இந்தத் திருமணத்தின் மற்றுமொரு சிறப்பு மணமக்கள் இருவருமே மூன்றாம் பாலினத்தவர்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய நட்பு காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்யாணிபுரம் எனும் கிராமத்தில் கடந்த 1988ஆம் ஆண்டில் தனது குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் பிரீத்திஷா.

Marriage to Thirunangai and Tirunanka A self respecting marriage in Chennai

“ஆணாகப் பிறந்த நான் எனக்குள் இருந்த பெண்மையை உணரத் தொடங்கியபோது எனக்கு வயது 14,” என்று முன்னணி ஊடகத்தில் பேட்டியளித்துள்ளார். திருநம்பி பிரேம் குமரன் உடன் தனது மண வாழ்க்கையைத் தொடங்கியுள்ள பிரீத்திஷா. பள்ளியில் படிக்கும்போது மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பிரீத்திஷா தற்போது தொழில் முறையாகவே ஒரு மேடை நாடகக் கலைஞராகவும் நடிப்புப் பயிற்றுநராகவும் உள்ளார்.

 “2004 அல்லது 2005 இருக்கும். புதுச்சேரியில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தபோது சுதா எனும் திருநங்கை ஒருவரை சந்தித்தேன். அவர் மூலம் கடலூரைச் சேர்ந்த பூங்கோடி எனும் திருநங்கையின் அறிமுகம் கிடைத்தது.

பூங்கொடியம்மாள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சில திருநங்கைகள் மஹாராஷ்டிர மாநிலம் புனேவில் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அங்கு திருநங்கைகள் பலருக்கும் இருக்கும் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்பு பாலியல் தொழில் அல்லது பிச்சை மட்டும் தான்

அவை இரண்டிலுமே விருப்பம் இல்லாத பிரீத்திஷா தனது தோழி ஒருவரின் ஆலோசனையின்படி புறநகர் ரயில்களில் பேன்சி பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். “நாங்கள் எல்லோரும் பிச்சை எடுக்கும்போது நீ மட்டும் இவற்றை விற்பனை செய்தால் மற்றவர்கள் எங்களையும் கேள்வி கேட்க தொடங்கிவிடுவார்கள் என்று திருநங்கைகளே திட்டியிருக்கிறார்கள்.

புறநகர் ரயில்களில் எந்தப் பொருளையும் விற்க தடை இருந்தாலும் ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே காவல் துறையினரும் எங்களை அனுமதித்ததால் நாளொன்றுக்கு 300-400 ரூபாய் எங்களால் சம்பாதிக்க முடிந்தது என்றார் பிரித்திஷா.

தங்களுக்கு திருமணம் செய்து வைத்த திராவிடர் கழகம் மற்றும் பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தினருடன் மணமக்கள்
அதில் கிடைத்த வருமானம் மற்றும் தன்னிடம் இருந்த ரூபாய் 23 ஆயிரம் சேமிப்பு ஆகியவற்றின்மூலம் பிரீத்திஷா பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டபோது அவருக்கு வயது 17.

Marriage to Thirunangai and Tirunanka A self respecting marriage in Chennai

அதன் பின்னர் ஒரு திருநங்கைகள் கலைக்குழுவில் இணைந்த அவர் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவதன் மூலம் பொருளீட்டி வந்த பிரீத்திஷா 3-4 ஆண்டுகளுக்குப், பிறகு சென்னை திரும்பினார்.

“சென்னை திரும்பியதும் மேடை நாடகங்களில் நடித்தபோது, அதே துறையில் உள்ள மணிக்குட்டி மற்றும் ஜெயராமன் ஆகிய இருவருடன் ஏற்பட்ட தொடர்பு என் நடிப்புத் திறனை மெருகேற்ற உதவியது.

அவர்கள் உதவியுடன் தற்போது நான் முழுநேரமும் நடிப்பு மற்றும் நடிப்புப் பயிற்சி வழங்கி வருகிறேன்,” என்கிறார் அவர்.
ஈரோட்டில் உள்ள ஒரு குடும்பத்தில் 1991இல் பெண்ணாகப் பிறந்த பிரேம் குமரன் உடன் 2012இல் ஃபேஸ்புக் மூலம் பிரீதிஷா நண்பரானாராம்.

அப்போது தான் ஒரு பெண்ணாக இருந்தாலும் ஆணாகவே உணர்வது குறித்து தெரிவித்தார் பிரேம். பால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய 2012இல் சென்னை வந்த பிரேம், பிரீத்திஷா மற்றும் அவரது நண்பர்களுடன் தங்கியிருந்தார். அதுதான் அவர்களது முதல் சந்திப்பு.

Follow Us:
Download App:
  • android
  • ios