திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இந்த நிலையில் அவர் மீண்டும் நலம் பெற வேண்டும் என்பதே லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் நமது ஏசியா நெட் தமிழின் விருப்பமாகும். ஆனால் காவேரி  மருத்துவமனையில் அறிக்கைப்படி அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது தெள்ள தெளிவாகியுள்ளது. 

நேற்று இரவு வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து இதுவரை எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. இதனால் அனைவரும் மிகுந்த துக்கத்தில் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் தான் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இவரை தொடர்ந்து கனிமொழி அழகிரியும் ஆகியோரும் முதலமைச்சரை சந்தித்தனர்.

 

பின்னர் 3 பேரும் மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர். முதலமைச்சர் சந்திப்பு குறித்து விசாரித்த போது ஒருவேளை விரும்பத்தாகாத சம்பவம் நடைபெற்றால். மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

கடற்கரை விதிகளின் படியும் நீதிமன்ற உத்தரவின் படியும், தமிழக அரசால் பெரிய அளவிற்கு இதில் உதவி செய்ய முடியாது என்றும், அநேகமாக காந்தி மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளன. ஆனாலும் மெரினா வேண்டும் என்ற கோணத்தில் திமுக தரப்பு முயற்சிகள் எடுத்துக் வருகின்றன.