Asianet News TamilAsianet News Tamil

மாரிதாஸ் விவகாரத்தை மறக்க பியூஸ் மனுஷ் விவகாரம்... ஸ்டாலின் மீது கூறப்படும் பகீர் புகார்..!

காஷ்மீர் போராட்ட விவகாரத்தில் திமுக இமேஜை டோட்டலாக டேமேஜ் செய்த மாரிதாஸ் விவகாரத்தை மறக்க வைக்கவே பியூஸ் மனுஷ் மூலமாக திமுக மற்றொரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

Maridhas trends on Twitter...piyush manush attacke...mk Stalin complaint
Author
Tamil Nadu, First Published Aug 30, 2019, 10:30 AM IST

காஷ்மீர் போராட்ட விவகாரத்தில் திமுக இமேஜை டோட்டலாக டேமேஜ் செய்த மாரிதாஸ் விவகாரத்தை மறக்க வைக்கவே பியூஸ் மனுஷ் மூலமாக திமுக மற்றொரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மாயாவதி, சந்திரபாயு நாயுடு போன்ற தீவிர பாஜக எதிர்ப்பாளர்கள் கூட மத்திய அரசுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்தனர். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் அகலக்கால் வைத்து கையை சுட்டுக் கொண்டார். காஷ்மீருக்கு ஆதரவான திமுகவின் போராட்டம் பாகிஸ்தானுக்கு ஆதரவான போராட்டம் என்று திசைமாற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோ திமுகவின் இமேஜை டேமேஜ் செய்யும் வகையில் இருந்தது. Maridhas trends on Twitter...piyush manush attacke...mk Stalin complaint

போதாக்குறைக்கு மாரிதாசுக்கு எதிராக திமுக புகார் அளித்த அந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. யார் இந்த மாரிதாஸ்? என பலரும் தேடி தேடி திமுகவிற்கு எதிரான வீடியோவை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். எந்த லாஜிக்குமே இல்லாமல் இந்த விவகாரத்தில் மாரிதாஸ் உலறியிருந்தாலும் கூட சாமான்ய மற்றும் பாமர மக்கள் பாகிஸ்தானுக்கும் – திமுகவிற்கும் தொடர்பு இருக்குமோ என்று யோசிக்க வைத்துவிட்டது மாரிதாஸின் அந்த வீடியோ.

 Maridhas trends on Twitter...piyush manush attacke...mk Stalin complaint 

தேவையில்லாமல் புலி வாலை பிடித்த கதையாக மாரிதாஸ் விவகாரத்தில் திமுக சிக்கியது. அதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று காத்திருந்த நிலையில் சமூக வலைதளவாசிகளின் கவனம் பியூஸ் மனுஷ் பக்கம் திரும்பியது. பொருளாதார நிலை மற்றும் காஷ்மீர் விவகாரம் குறித்து பாஜக அலுவலகத்திற்கே நேரில் சென்று கருத்து கேட்க உள்ளதாக கூறி பியூஸ் சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்றார். Maridhas trends on Twitter...piyush manush attacke...mk Stalin complaint

பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறியதுடன் தேவையில்லாமல் சட்டமும் பேசியுள்ளார் பியூஸ். இதனால் டென்சன் ஆன பாஜகவினர் பியூசை நையப்புடைத்து அனுப்பினர். இதில் பாஜகவினர் பியூசை குற்றஞ்சாட்டுவதை விட திமுகவினரைத்தான் கை காட்டுகின்றனர். முதல் நாள் அதாவது செவ்வாய் கிழமை ஸ்டாலின் சேலம் வந்து சென்றார். மறுநாள் பியூஸ் மனுஷ் பாஜக அலுவலகம் சென்று தகராறு செய்கிறார். Maridhas trends on Twitter...piyush manush attacke...mk Stalin complaint

எனவே ஸ்டாலின் போட்ட திட்டத்தில் தான் பியூஸ் பாஜக அலுவலகம் சென்றுள்ளார் என்று கூறி வருகிறார் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் போன்றோர். மேலும் மாரிதாஸ் விவகாரத்தை மடை மாற்ற பியூஸ் மனுசை திமுக பயன்படுத்திக் கொண்டது என்றும் கூறி வருகிறார்கள். இதில் லாஜிக் இல்லை என்றாலும் கூட சமுக வலைதளங்களில் பாஜகவினர் இப்படித்தான் தகவலை பரப்பி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios