ஜெயக்குமார் தன்னிடம் நெருக்கமாக இருந்த பெண்களுக்கு எல்லாம் குடிசை மாற்று வாரிய வீடுகளை ஒதுக்கி கொடுத்து செட்டில்மென்ட் செய்து வருவதாக தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் கூறியுள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய போது வெற்றிவேல் கூறியவதாவது: அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் வருவது முதல் முறை அல்ல. அவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியிலான தவறுகளை செய்யக்கூடியவர். 

வட சென்னை முழுவதும் ஜெயக்குமாரின் லீலைகள் பற்றி பலருக்கும் தெரியும். ஜெயக்குமார் பல்வேறு முறை பிரச்சனைகளில் சிக்கியும் தப்பித்து வந்துள்ளார். எத்தனை பெண்களுடன் ஜெயக்குமார் தொடர்பில் இருக்கிறார் என்பதற்கு தன்னிடம் பட்டியல் உள்ளது. அந்த பட்டியலை தற்போது வெளியிட முடியாது. சில பெண்கள் ஜெயக்குமாருக்கு எதிராக பேச தயாராக உள்ளனர். ஜெயக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து விலகிய பிறகு பாருங்கள், அவர் மீது எத்தனை பெண்கள் புகார் கொடுக்கிறார்கள் என்று. 

வட சென்னைக்காரன் என்கிற முறையில் என்னிடமும் ஜெயக்குமார் குறித்து பல்வேறு புகார்கள் வந்துள்ளன. சொல்லப்போனால் ஜெயக்குமாரால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கத்தை சேர்ந்த தாய், மகள் இருவரை நடுத்தெருவில் ஜெயக்குமார் நிற்க வைத்துள்ளார். அந்த குடும்பமே சீரழிந்துள்ளது. இதே போல் பல்வேறு பெண்களையும் ஜெயக்குமார் சீரழித்துவிட்டு செட்டில்மென்ட் செய்துவிடுவார். 

பெண்களை சீரழித்துவிட்டு அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளை வாங்கி கொடுத்துவிடுவது ஜெயக்குமாரின் பாலிசி. ஏராளமான பெண்கள் ஜெயக்குமாரால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த விவகாரம் குறித்து பேசினால் அந்த பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று பார்க்கிறேன். எனவே செய்த தவறை ஜெயக்குமார் ஒப்புக் கொள்வது நல்லது.

தற்போது ஜெயக்குமாரால் தாயாகியுள்ள பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த பெண் மூலம் பிறந்த குழந்தைக்கு சொத்திலும் ஜெயக்குமார் பங்கு கொடுக்க வேண்டும். இவ்வாறு வெற்றிவேல் செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.