என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். இது அற்புதமான நிகழ்வு. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நான் கண்டுகொள்ளப் போவதில்லை

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடலிங் அழகி கிரிஸ் கலேரா, 33 வயதான இவர் மாடலிங் துறையில் அந்நாட்டில் பிரபலமாக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என ஆசை, அதற்கான ஆட்களை தேடினார். சிலருடன் டேட்டிங்கிலும் ஈடுபட்டார். ஆனால் எந்த நபரும் நீண்ட நாளுக்கு நீடிக்கவில்லை, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்றனர். இதனையடுத்து தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி, இதையடுத்து அவர் பிரேசில் சாவ் பவ்ளவ் பகுதியில் உள்ள சர்ச்சில் திருமண ஏற்பாடுகளை செய்தார். அவர் மணப்பெண் போல அலங்காரம் செய்து தன்னைத்தானே திருமணம்செய்து கொண்டார். திருமண நிகழ்வில் கிரிஸ் கேலராவின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக கிரிஸ் கூறுகையில், “நான் எப்போதும் தனியாக இருக்க பயம் கொள்வேன். ஆனால் தற்போது அதனை நானே தேர்ந்தெடுத்துள்ளேன். நானே என்னை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். என்னை நானே காதலிக்க வேண்டும் என்று உணர்ந்துள்ளேன். இதை உணர்ந்த நிலையில் கொண்டாட முடிவு செய்தேன். என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். இது அற்புதமான நிகழ்வு. மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். நான் கண்டுகொள்ளப் போவதில்லை” என்றார்.

இதற்கு அவர் நண்பர்கள் எல்லோரையும் அழைத்திருந்தார். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.