திமுகவின் தலைமை கழக பேச்சாளர் மனுஷ்யபுத்திரன் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக சைலன்ட் மோடில் இருப்பதற்கு காரணம் திமுகவின் தலைமை என்கிறார்கள்.

திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்த மனுஷ்யபுத்திரன் சில வருடங்களுக்கு முன்னர் அந்த கட்சியில் இணைந்தார். பிறகு திமுகவின் தலைமை கழக பேச்சாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் திமுக சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்கவும் மனுஷ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மனுஷ்யபுத்திரன் வாய்ப்பு எதிர்பார்த்தார் கிடைக்கவில்லை. 

போதாக்குறைக்கு மாநிலங்களவை எம்பி தேர்தலில் மனுஷ்யபுத்திரனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று திமுகவில் உள்ள முஸ்லீம் லாபி முரண்டு பிடித்தது. என்னது மாநிலங்களவை எம்பியா? அதற்கெல்லாம் நீ வொர்த் இல்ல தம்பி என்று மனுசை ஒதுக்கி வைத்தது திமுக. இதன் பிறகு திமுக சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள மனுஷ் ஆர்வம் காட்டவில்லை என்கிறார்கள். மிகவும் வற்புறுத்தினால் குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சியில் மட்டும் பங்கேற்பதாக சொல்கிறார்கள். 

முன்பெல்லாம் ஸ்டாலினை சந்திக்க அடிக்கடி அறிவாலயம் வருவார் மனுஷ். ஸ்டாலினும் அவரை அழைத்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுவார். ஏன் ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டுக்கே செல்லக்கூடியவர்களில் ஒருவராக மனுஷ் திகழ்ந்தார். வழக்கமாக திமுகவிற்கு சிக்கல் வரும்போதெல்லாம் சமூக வலைதளங்களில் அவர் கொடுக்கும் பதிலடி திமுகவினருக்கு உதவியாக இருக்கும். காஷ்மீர் விவகாரத்தில் மாரிதாஸ் பின்னிப் பெடல் எடுக்க மனுஷ் போன்றோர் பெரிய அளவில் எதிர்வினையாற்றவில்லை. 

இதற்கெல்லாம் காரணம் திமுகவில் மனுஷ் ஓரங்கப்பட்டது தான் என்கிறார்கள். அதிலும் பாஜகவிற்கு எதிராக பேசுவதாக நினைத்துக் கொண்டு இந்துக்களுக்கு எதிராக மனுஷ் பேசுவதாக ஒரு புகார் இருந்தது. இந்த விவகாரம் திமுகாவை மிகவும் அப்செட்டாக்கியதாக சொல்கிறார்கள். இதனால் தான் மனுஷ் முன்பு போல் திமுகவில் ஒரு முக்கிய பிரமுகர் போல் வலம் வர முடியாததற்கு காரணம் என்கிறார்கள்.