Asianet News TamilAsianet News Tamil

மாம்பழ சின்னம் கிடைப்பதில் சிக்கல்...? பாமகவுக்கு திடுக் தலைவலி..!

மக்களவை தேர்தலில் பாமவுக்கு மாம்பழ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாமகவுக்கு தேர்தல் ஆணையம் மனது வைத்தால் மாம்பழம் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

mango logo...election commission
Author
Tamil Nadu, First Published Feb 28, 2019, 11:02 AM IST

மக்களவை தேர்தலில் பாமவுக்கு மாம்பழ சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பாமகவுக்கு தேர்தல் ஆணையம் மனது வைத்தால் மாம்பழம் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகளில் திமுக, அதிமுக, தேமுதிக மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாகதான் தேர்தல் ஆணையம் நடத்திய மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளுக்கு இந்த கட்சிகள் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 mango logo...election commission

இதனால்தான் தேர்தல் ஆணையம் நடத்திய மக்களவை தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளுக்கு இந்த கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தது. ஒரு கட்சி தேசிய அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2% வாக்குகள் அதாவது 11 எம்.பிக்களை கொண்டிருக்க வேண்டும். அதேபோல் மாநில கட்சிகள் என்றால் சட்டப்பேரவை தேர்தலில் 6 சதவிகித வாக்குகளோ அல்லது 2 சட்டமன்ற உறுப்பினர்களையோ கொண்டிருக்க வேண்டும்.  mango logo...election commission

அப்படி இல்லை என்றால் இந்திய தேர்தல் ஆணையம் அந்தக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் அங்கீகாரம் தொடர்பான விதிகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை மறு ஆய்வு செய்வதற்கான விதிகளை திருத்தி, மறு ஆய்வுக் காலத்தை 5ல் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் பாமக ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றிருந்தது. 

அதனால் இந்த கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பாமக அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவில் தேர்தலில் வாக்குகளை பெறவில்லை. தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் பாமகவின் அங்கீகாரம் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது. இதன் விளைவாக பாமகவின் மாம்பழம் சின்னம் சுயேச்சை சின்னமாக மாறிவிட்டது. இதனால் இந்த சின்னத்தை சுயேச்சை வேட்பாளர்கள் யார் வேண்டும் என்றாலும் கோரிப் பெற முடியும். mango logo...election commission

இந்நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் பாமக மாம்பழ சின்னத்தை கேட்கும் பட்சத்தில் சுயேச்சை வேட்பாளர்களும் இதை கேட்டால் யாருக்கு இதை வழங்குவது என்ற சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் மனது வைத்தால் பாமகவுக்கு மீண்டும் மாம்பழம் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios