இன்று காலை அதிமுக - பாமக இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக 7 தொகுதிகளில் போட்டியிடவுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக - பாமக கூட்டணி உறுதியானது. இதையடுத்து சென்னை அடையாறு கிரவுன் பிளாசா ஓட்டலில் இன்று காலை 11.50 மணிக்கு ராமதாஸ், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடனான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதிமுகவுடனான கூட்டணியால் பாமகவை வறுத்தெடுக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். பாமகவினரோ பதிலடி கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…
அரசியல் கட்சிகள், விமர்சகர்கள், நெட்டிசன்கள் முதல்கொண்டு ராமதாஸை கடுமையாக கலாய்த்து வருகின்றனர். ராமதாஸை சமூக போராளி என்று நினைத்தேன் எனவும் பாமக-அதிமுக தொண்டர்கள் இந்த கூட்டணியை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியவில்லை எனவும் அமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன் கிண்டல் செய்துள்ளார். மண்டியிட்டமாங்கா என்ற வார்த்தை டிவிட்டரில் தாறுமாறாக ட்ரெண்ட் அடிக்கிறது.
