Asianet News TamilAsianet News Tamil

கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி! வேதனையில் இரங்கல் தெரிவித்த கையோடு நிவாரணம் அறிவித்த முதல்வர்!

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு  அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பேருந்து மோதியது.

manapparai accident...cm stalin announcement relief
Author
First Published Jun 26, 2023, 8:31 AM IST

மணப்பாறை அருகே அரசு பேருந்தும், காரும் மோதிய விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு  அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. மணப்பாறை அருகே கல்கொத்தனூர் என்ற பகுதியில் சென்றபோது சாலையில் எதிரே வேகமாக வந்த கார் அரசு பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- தமிழகத்தை காப்பாற்ற முடியாத ஸ்டாலின், பிஹார் சென்று பிரதமரை உருவாக்குகிறாராம்.! இறங்கி அடிக்கும் இபிஎஸ்

manapparai accident...cm stalin announcement relief

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;-  திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை வட்டம் வையம்பட்டி கிராமம் லெட்சம்பட்டி பிரிவு ரோடு அருகே திருச்சிராப்பள்ளி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் (25-6-2023) மாலை திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் காரில் பயணம் செய்த மணப்பாறை வட்டம், கே.உடையாப்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன், த/பெ.முத்துசாமி (40), ஐயப்பன், த/பெ.இரவிச்சந்திரன் (35) மணிகண்டன், த/பெ.கணேசன், மணப்பாறை வட்டம், ஆலிப்பட்டியைச் நாகரத்தினம், த/பெ.பப்பு மற்றும் தோகைமலை வட்டம், பில்லூரைச் சேர்ந்த தீனதயாளன், த/பெ.செல்வராஜ் (19) ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இதையும் படிங்க;-  பிரதமர் கனவோடு ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் ஸ்டாலின்! இதெல்லாம் ஏற்கவே முடியாது! இறங்கி அடிக்கும் இபிஎஸ்.!

manapparai accident...cm stalin announcement relief

 உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios