திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வத்தை மர்ம நபர் ஒருவர் தாக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சொந்த ஊருக்கு சொல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுவதற்காக ஓபிஎஸ் வந்ததார்.

அப்போது செய்தியாளர்களை தள்ளிக் கொண்டு மர்ம நபர் ஒருவர் ஓபிஎஸ்ஐ நெருங்கினார். இதனால் சந்தேகமடைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரை பிடித்து சோதனையிட்டனர்.

அதில் அவரிடம் ஒரு கத்தி இருந்ததும், ஓபிஎஸ்ஐ தாக்குவதற்காக அவர் வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மர்ம நபரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் அந்த நபரின் பெயர் சோலை ராஜன் என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே ஓபிஎஸ்க்கு கொலை மிரட்டல் இருப்பதால் அவருக்கு அரசு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.