நெட்டிசன்கள் பலரும் மலாலாவின் இந்த கருத்தை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டு, கலாய்த்து வருகின்றனர். 

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் குரல் கொடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மலாலா நேற்று ட்விட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "படிப்பு முக்கியமா ஹிஜாப் முக்கியமா என்று தேர்வு செய்ய கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.

பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்து இருக்கிறது. நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மலாலாவின் புத்தகத்தில் இருந்து முக்கியமான விஷயத்தை சொல்கிறேன். "நான் மலாலா" என்ற புத்தகத்தில், புர்கா பற்றி கூறியுள்ள மலாலா அதில் புர்கா அணிவது என்பது பெரிய துணி ஷட்டில்காக்கிற்குள் நடப்பது போன்றது.

Scroll to load tweet…

பார்க்க அது க்ரில் போல தோன்றும். வெப்பமான நாட்களில் அது அடுப்பு போலவும் இருக்கும்’ என்று எழுதியிருக்கிறார். புர்காவை வேண்டாம் என்று கூறியிருக்கும் நீங்கள், இப்போது புர்கா அணிய வேண்டும் என்று சொல்கிறீர்களே ஏன் ? மாற்றிப்பேசுகிறீர்கள் என்று கருத்து எழுப்ப, நெட்டிசன்கள் பலரும் மலாலாவின் இந்த கருத்தை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டு, கலாய்த்து வருகின்றனர்.