Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு ஒரு பிரசாந்த் கிஷோர்...!! எங்களுக்கு 70 பிரசாந்த் கிஷோர் அதிரடி காட்டிய அரசியல் கட்சி...!!

அதில் இடம்பெற்றுள்ளவர்கள் அரசியல் ,  சமூகம் ,  சார்ந்த அனைத்து விதமான புள்ளி விவரங்கள் சேகரித்து அதனடிப்படையில் பணியாற்ற நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவது ,  தமிழகம் முழுவதிலும் கட்சிக்கு உள்ள செல்வாக்கு என்ன.?

makkal needhi maiyam leader kamal hasan create 70 member's committee for political guide like prasanth kishore  style
Author
Chennai, First Published Dec 30, 2019, 1:07 PM IST

திமுகவின் தேர்தல் வெற்றிக்காக வீயூகம் வகுத்து வரும்  பிரபல அரசியல் நிபுணர்களில் ஒருவரான பிரசாந்த் கிஷோர் பாணியில் மக்கள் நீதி மய்யத்தை  வழிநடத்த புதிய குழு ஒன்று  உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .  தமிழகத்தை ஆட்சி செய்த  அண்ணா, காமராஜர்,  எம்ஜிஆர் , கருணாநிதி , ஜெயலலிதா என கொடிகட்டிப் பறந்த முதலமைச்சர்கள் தங்களின் பேச்சாற்றல் மக்கள் மத்தியில் தங்களுக்கு இருந்த ஈர்ப்பை மையமாக வைத்து வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்தனர் .  ஆனால் தற்போது தமிழகத்தில்  அந்த அளவுக்கு எந்த தலைவருக்கும் மக்களின் ஈர்ப்பு இல்லை என்பதால்  அரசியல் நிபுணர்களின் உதவியுடன் தேர்தல்  வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

makkal needhi maiyam leader kamal hasan create 70 member's committee for political guide like prasanth kishore  style 

அந்தவகையில் பிரபல அரசியல் வல்லுனர்களில்  ஒருவரான பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் ஆவார் கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடிக்கு ஆலோசனை வழங்கினார் அதில் மோடி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார்.  கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மக்கள் நீதிமய்யம் கட்சிக்காக பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர் ,  ஆனால் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் அதன் பின்னர் நடந்த நாங்குநேரி விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை எதனால் மக்கள் நீதி மய்யத்தை  கைகழுவிய பிரசாந்த் கிஷோர்,  சில மாதங்களுக்கு முன்னர் அதற்கான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு திமுகவுடன் ஐக்கியமானார்.  இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து பிரசாந்த் கிஷோர் பாணியில் மக்கள் நீதி மையம் சுமார் 70 பேர் கொண்ட தேர்தல் வியூகம் வகுக்கும் குழுவை  அமைத்துள்ளது.  

makkal needhi maiyam leader kamal hasan create 70 member's committee for political guide like prasanth kishore  style

அதில் இடம்பெற்றுள்ளவர்கள் அரசியல் ,  சமூகம் ,  சார்ந்த அனைத்து விதமான புள்ளி விவரங்கள் சேகரித்து அதனடிப்படையில் பணியாற்ற நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்குவது ,  தமிழகம் முழுவதிலும் கட்சிக்கு உள்ள செல்வாக்கு என்ன.?  பலமான தொகுதிகள் எது,  பலவீனமான தொகுதிகள்குதி எது என்பனவற்றை அடையாளம் காணுவதுடன்,அதற்கேற்ப  தேர்தல் நேரத்தில் மக்களின் மனநிலையை அறிந்து  அதற்கான பிரச்சார யுக்திகளை மாற்றுவது மற்றும்  ஆலோசனைகளை வழங்குவது மற்றும் கள நிலவரத்திற்கு ஏற்ப வீயூகங்களை அப்பதை மையமாகக் கொண்டே  இந்த குழு செய்ல்படும் என தெரியவந்துள்ளது....

Follow Us:
Download App:
  • android
  • ios