Asianet News TamilAsianet News Tamil

#BREAKING ஆண்டவரை அடுத்தடுத்து அட்டாக் செய்யும் நிர்வாகிகள்.. பொதுச்செயலாளர் குமரவேல் பகீர் குற்றச்சாட்டு..!

ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவர்களது தவறான வழிநடத்தலே காரணம் என மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் கூறியுள்ளார்.

makkal needhi maiam general secretary ck kumaravel resign
Author
Tamil Nadu, First Published May 20, 2021, 12:29 PM IST

ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவர்களது தவறான வழிநடத்தலே காரணம் என மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல் கூறியுள்ளார். 

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் குமரவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 2019-ல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி போனோலும், தமிழகத்தில் உங்களோலும் மக்கள் நீதி மய்யத்தாலும் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் மீண்டும் இணைந்தேன். மக்கள் இடத்திலும் அந்த மாற்றத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகாக இருந்தது.

makkal needhi maiam general secretary ck kumaravel resign

கடந்த நவம்ர் - டிசம்பர் மாதங்களில் கட்சியின் நடவடிக்கைகளாலும், உங்களுடைய சூறாவளி சுற்றுப்பயணத்தாலும் மக்களிடையே மய்யத்தின் மீதான வரவேற்பும், நம்பிக்கையும் அதிகரித்ததை நான் கண்கூடாக பார்க்க முடிந்தது. அதை தொடர்ந்து, மய்யத்திற்கு 'டார்ச்லைட்' சின்னம் மீண்டும் கிடைத்த போதும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்த ப போதும், மக்கள் நீதி மய்யத்தின் மீதான அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் மேலும் பிரகாசமானது.

makkal needhi maiam general secretary ck kumaravel resign

ஆனால், இன்று நமக்கான வாய்ப்புகளை நாம் இழந்துவிட்டோம். எதிர்க்கட்சியில் அமரவேண்டிய அத்தனை தகுதிகளும் நமக்கு இருந்த போதும், ஒரு தொகுதியில் கூட நம்மால் வெற்றி பெறமுடியவில்லையே ஏன்? உங்களுடைய அரசியல் ஆலோசகர்களும் அவர்களுடை தவறான வழிநடத்தலும் தான் காரணம். ஒரு தொகுதியில், வெற்றி பெற்றால் போதும் என்கிற இவர்களுடைய குறுகிய எண்ணமும் செயல்பாடுகளும் தான், மக்களிடையே இருந்த நம் மீதான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் தகர்த்து விட்டது.

makkal needhi maiam general secretary ck kumaravel resign

நமது தோல்விக்கான காரணங்களையும், காரணிகளையும் இதற்கு முன் விலகிய பொறுப்பாளர்கள் உங்கள் முன்னும், ஊடகங்கள் முன்னும் வைத்துவிட்டார்கள். அவர்கள் முன்வைத்த காரணங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பது நீங்களும் அறிவீர்கள். புதிதாக நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வரலாறு படைப்பவர்களாக இருக்கவேண்டிய நாம், வரலாறு படிப்பவர்களாக மாறிவிட்டோமே என்கிற கோபமும், ஆதங்கமும் எனக்கு நிறைய உண்டு. தனிமனித பிம்பத்தை மட்டுமே சார்ந்து இருக்கிற அரசியலை விடவும், மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல்  பாதையில் பயணிக்க விரும்புகிறேன். ஆகவே, மக்கள் நீதி மய்யத்தின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையிலிருந்து உடனடியாகக விலகுகிறேன் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios