வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வேளச்சேரி தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தில் சமீபத்தில் இணைந்தவர் சந்தோஷ்பாபு. இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஆளும் கட்சியின் டார்ச்சர் தாங்க முடியாமல் விருப்ப ஓய்வு பெற்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். கட்சியின் தலைமை நிலைய பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். அவர் வருகிற சட்மன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று வேட்புமனுவும் தாக்கல் செய்து விட்டு பிரசாரத்தையும் தொடங்கினார். 

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனை சந்தோஷ் பாபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறுகையில்:- எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை வேளச்சேரி தொகுதி மக்களிடம் தெரிவித்து கொள்கிறேன். நான் எவ்வளவு துரதிர்ஷ்டவசமானவன். உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற விரும்புகிறேன். நாம் டிஜிட்டல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். எங்களது கட்சியினர் உங்களை வந்து சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்துக்கும் வாக்களியுங்கள் என்று சந்தோஷ் பாபு கூறியுள்ளார்.