6ம் வகுப்பு பாடத்தில் வர்ணாசிரமம்.. பிஞ்சு குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பது நியாயமா? - மநீம கேள்வி !
பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது. அதை உடனே அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது மக்கள் நீதி மய்யம்.
மக்கள் நீதி மய்யம் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடத்தில், சாதி பேதத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது. அப்பாடத்தில் இடம்பெற்றுள்ள படங்கள் வேதனையை திகரிக்கின்றன.
"வர்ணாசிரம முறை" என்ற தலைப்பிலான அந்தப் பாடத்தில் பிராமணர்கள், சத்ரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் எனக் குறிப்பிடப்பட்டு, ஒவ்வொருவருக்குமான வேலைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுகுறித்த கேள்விகளும் உள்ளன. பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் இப்பாடம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க..‘ஊழலை நிரூபிச்சு காட்டுங்க பிடிஆர்.. அரசியலில் இருந்து விலக தயார்’ - மாஸ் காட்டிய செல்லூர் ராஜு !
பேதமற்ற சமுதாயம் அவசியம் என்று கற்றுக்கொடுக்க வேண்டிய பள்ளியில், மனிதர்களிடம் சாதி பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான பாடத்தைக் கற்றுத் தருவது கடும் கண்டனத்துக்குரியது.உடனடியாக அந்தப் பாடத்தை அகற்ற வேண்டும் என்று சிபிஎஸ்இ மற்றும் மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?