Asianet News TamilAsianet News Tamil

செத்துப் போச்சி மோடியின் மேக்கின் இந்தியா! ராகுல் காந்தி கிண்டல்....

Make in India Project Just Died Rahul Gandhis Fresh Salvo on PM Modi
'Make in India Project Just Died': Rahul Gandhi's Fresh Salvo on PM Modi
Author
First Published Nov 27, 2017, 12:13 PM IST


குஜராத் மக்களிடம் பிரதமர் மோடியின் மாயஜாலப் பேச்சு பலிக்கவில்லை. டாடா நிறுவனத்தின் நானோ கார் உற்பத்தி குறைக்கப்பட்டதன் மூலம் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் செத்துவிட்டது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல்

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 4, 9 ந்தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் போட்டி போட்டி பிராசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் தொடங்கப்பட்ட டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலை தனது உற்பத்தியை குறைத்துவிட்டது. நாள்ஒன்றுக்கு 2 கார்கள் மட்டுமே தயாரிக்கிறது என்று நாளேடுகளில் செய்தி வெளியாகின.

இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பிரதமர் மோடியை கடுமையாக வசைபாடி கருத்துக்களை நேற்று பதிவிட்டார். அவர் கூறியதாவது-

செத்துவிட்டது

குஜராத் மாநிலத்தில் சனாதன் நகரில் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட நானோ கார் தொழிற்சாலை தனது உற்பத்தியை குறைத்து நாள் ஒன்றுக்கு 2 கார்கள் மட்டுமே தயாரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. பிரதமர் மோடியின் கனவுத் திட்டமான ‘ேமக் இன் இந்தியா’ திட்டம் செத்துவிட்டது.

யார் பொறுப்பு?

குஜராத் மாநிலத்தில் வரி செலுத்துபவர்களின் ரூ.33 ஆயிரம் கோடி பணத்தை டாடா நிறுவனத்துக்கு சலுகையாக வாரிக் கொடுத்தார் மோடி. இப்போது அந்த பணம் எல்லாம் சாம்பலாகப் போய்விட்டது. அதற்கு யார் பொறுப்பு ஏற்பது?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios