மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ்தக்ரே ராமர்கோவில் கட்ட 1கோடி நிதி உதவி அளித்து அசத்தியிருக்கிறார்.


 முதலமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆனதையொட்டி உத்தவ் தாக்கரே அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக இன்று உத்தர பிரதேசம் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்குள்ள  நிகழ்ச்சியில் பேசிய உத்தவ் தாக்கரே, ''நான் கடவுள் ராமரின் ஆசிர்வாதம் கிடைக்க இங்கு வந்துள்ளேன். கடந்த  ஒன்றரை ஆண்டுகளில் நான் அயோத்திக்கு வருவது இது மூன்றாவது முறை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மகாராஷ்டிரா அரசு சார்பாக அல்லாமல் எனது அறக்கட்டளை சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்." என்றார்.