மகாராஷ்ட்ராவில்ஒரே நாளில் கொரோனா பாதிக்கப்பட்ட 4போலீசார் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது..

இந்தியாவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்ட்ரா. இங்கே தான் அதிக அளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள மக்கள் அதிகஅளவில் டெல்லி போன்ற மாநிலங்களில் வேலை செய்து வந்தார்கள். கொரோனா தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது உணவுக்கு வழியின்றி சொந்த ஊர்களுக்கு கால் நடையாக சைக்கிள் போன்றவற்றில் சென்றார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 4 போலீசார் பலியாகியிருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.ஜூன் 12-ம் தேதி நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதித்த காவலர்களில் 35 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் 21 பேர் மும்பை காவல்துறையைச் சேர்ந்தவர்கள். நாட்டிலேயே கொரோனா தொற்று அதிகம் இருக்கும் மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.இந்த நிலையில், கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 1,233 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள். அவர்களில் 334 பேர் பணிக்குத் திரும்பிவிட்டதாகவும் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.