பல்டி ராஜனுக்கு  குருமூர்த்தியும் சொல்கிறார் என்கிற தலைப்பில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில், ’’மாஃபியா பாண்டியராஜன் மறுபடி மறுபடி உளறிக் கொண்டு இருக்கிறார். ‘மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை’என்று முதலில் உளறினார். இதற்கான ஆதரங்களை ( நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் ஆணையம் அறிக்கை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அதன் நகல், சிட்டிபாபுவின் சிறை டைரி) சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்ததும் , ‘இரண்டு நாளில் நான் நிரூபிப்பேன்’என்று சொல்லிவிட்டு ஓடிய லொடுக்கு பாண்டி பத்து நாட்களாகவே ஆளையே காணோம். இப்போது மீண்டும் வந்து ‘ஸ்டாலின் மிசாவில் கைதாகவே இல்லை என்று நான் சொல்லவில்லை’என்று உளறுகிறது மாஃபியா.

 

புது வைரஸ் ஏதோ தாக்கியதால் தான் இந்த மாதிரி மாஃபியா உளறுகிறது. இதற்கு நாம் பதில் தரத்தேவையில்லை. அவர்களின் குருநாதர் குருமூர்த்தியே சொல்லி விட்டார். 

20.11.2019 தேதியிட்ட துக்ளக் இதழில் ஸ்டாலின் மிஸா கைதியா? என்று வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘ஸ்டாலின் மிஸா கைதியாக சிறையில் இருந்தது உண்மை. எனக்கே தெரியும். அவர் மிஸா கைதிதான்’என்று பதில் அளித்துள்ளார்.

குருமூர்த்தி பொய்சொல்கிறார் என்பாரா மாஃபியா. திமுகவை ஒவ்வொரு இதழிலும் விமர்சித்து எழுதக்கூடிய குருமூர்த்தி தான் இதையும் சொல்கிறார். அரசியல் விமர்சனம் என்பது வேறு; வரலாற்றை திரிப்பது என்பது வேறு -இதை மாஃபியா படித்த கல்லூரியில் சொல்லித்தரவில்லையா? ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அதனை நிரூபிக்க நித்தம்மு பலப்பல பல்டிகளை அடிக்கும் பாண்டியராஜனை ‘பல்டிராஜன்’என்றே அழைக்கலாம். ச்சீ... நாயும் பிழைக்காது இந்த எச்சில் பிழைப்பு’’ என விமர்சித்துள்ளது.