Madya Pradesh CM beat a volenteer in election campaign

தேர்தல் பிரசாரத்தின் போது, தொண்டர் ஒருவரின் கன்னத்தில் பளார் என அறைந்த முதல் அமைச்சரின் செயல் வீடியோவில் பதிவானது. இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக சிவராஜ் சவுகான் இருந்து வருகிறார். முதல்வர் சிவராஜ் சவுகான் மிகவும் அமைதியான, பொறுமையாக செயல்படக்கூடியவர் என்று கட்சி வட்டாரங்களிலும், அரசு வட்டாரங்களிலும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தீவிர தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் ஈடுபட்டு வருகிறார். 5மாவட்டங்களில் உள்ள 19 உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை(17ந்தேதி) உள்ளாட்சி தேர்தலும், 20ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. தார், பர்வானி, கான்ட்வா, குணா, அனுப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 19உள்ளாட்சிகளும், 51 கிராமபஞ்சாயத்துக்களும் உள்ளன. இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் மாநிலத்தில் நடக்க உள்ள நிலையில், இந்த தேர்தல் பா.ஜனதாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இந்நிலையில், தாார் மாவட்டம், சர்தார்பூர் நகரில் நேற்றுமுன்தினம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் சிவராஜ் சவுகான் ஈடுபட்டு இருந்தார். அப்போது, கூட்டத்தில் பாதுகாவலர்களை மீறி முதல்வரை பலர் நெருங்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆத்திரமடைந்த முதல்வர் சிவராஜ் சவுகான், தொண்டர் ஒருவரின் கன்னத்தில் பளார் என அறை கொடுத்தார்.

இந்த காட்சி அங்கு செய்தி சேகரிப்பில் இருந்த பத்திரிகையாளர்களின் வீடியோவில் பதிவானது. ஆனால், உடனடியாக முதல்வர் சிவராஜ் சவுகான் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டார். அந்த இளைஞரை ஏன் அறைந்தார்? எதற்காக அறைந்தார்? என்ற விவரம் தெரியவில்லை.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.