மதுரையை ராசியான இடமென்று கருதி ரஜினிகாந்த் போன்றோரெல்லாம் கட்சி தொடங்கினாலும் அவர்களுடைய ராசி எந்த விதத்தில் உள்ளது என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மனதார வரவேற்பதாகவும் அமைச்சர் உதயக்குமார் மதுரை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார்.

மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர்.,

வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டை வழங்கியிருக்கிறார் நிதியமைச்சர்.பல்வேறு துறைகளுக்கு இந்த நிதிநிலை அறிக்கையின் மூலமாக பல கோடி திட்டங்களை வழங்கி இருக்கிறோம். கவர்ச்சித் திட்டங்கள் இல்லாமல், மக்களின் மனதை கவரும் திட்டங்களை வழங்கி இருக்கிறார்.இந்த பட்ஜெட்டின் மூலம் மக்கள் வாழ்வாதாரம் உயரும் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை பொருத்தவரையில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தெளிவாகச் சொல்லி விட்டனர் இஸ்லாம் சகோதரர்கள் அவர்களுக்கு எந்தவித கெடுதலும் வந்துவிடாமல் பாதுகாக்கக்கூடிய அரசு இந்த தமிழக அரசு.இதைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் மதுரையில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் இருக்கிறதே என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு., 'மதுரை பல்வேறு மன்னர்கள் ஆண்ட நாடு, பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது மதுரை. அதன் அடிப்படையில் ரஜினிகாந்த் மதுரையில் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் கூட அவரின் ராசி எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ரஜினி அரசியலுக்கு வருவதை நாங்கள் வரவேற்கிறோம்" என்றார்.