Asianet News TamilAsianet News Tamil

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருந்து பற்றக்குறை... ஆர்.பி. உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிக்கு வழங்க மருந்துப் பற்றக்குறை நிலவி வருவதாக முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி சட்டமன்றத் துணை தலைவருமான ஆர்.பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். 

madurai rajaji govt hospital shortage of medicines says rb udayakumar
Author
First Published Sep 14, 2022, 9:34 PM IST

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிக்கு வழங்க மருந்துப் பற்றக்குறை நிலவி வருவதாக முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி சட்டமன்றத் துணை தலைவருமான ஆர்.பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சிக் காலத்தில் மூன்று முறை 58 கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது வைகை அணையின் நீர் மட்டம் 70 அடியை எட்டியும், விவசாயிகள் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நீர் திறந்து விடாமல் தாமதம் செய்து வருகிறது. வைகை அணையிலிருந்து 11 நாட்களுக்கு 316 கன அடி என்கிற அளவில் நீர் திறந்தாலே அந்த பகுதியில் உள்ள 35  கண்மாய்கள் அனைத்து நிரம்பி விடும். இதன் மூலம் 110 வருவாய் கிராம மக்கள், 1 லட்சம் மக்களின் குடிநீர் ஆதராம் 2 ஏக்கர் நிலத்திற்கு  பாசன வசதி பெறும். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தலாம் என்ற நோக்கத்துடன் இங்கே வந்தோம்.

இதையும் படிங்க: சசிகலா புஷ்பாவிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி… தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்!!

மாவட்ட ஆட்சியர் இது குறித்த கோரிக்கையை  தமிழக  முதல்வரிடம் கொண்டு செல்வதாக உறுதியளித்ததையடுத்து உள்ளிருப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தென் தமிழகத்திற்கு நீர் ஆதாரமாக இருந்து வரும் முல்லைப் பெரியாறு அணையில் 1979 ஆம் ஆண்டில் 2.35 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்ற வந்தது. நீர் தேக்கம் 132 அடியாக குறைந்த போது 1.75 லட்சமாக  குறைந்தது. இதன் காரணமாக அப்பகுதி விவசாயிகள் முல்லைப் பெரியாற்றில் 142 அடி நீர்  தேக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஆட்சிகாலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த உத்தரவும், பேபி அணையை சீர் செய்தப்பின் 152 அடி நீர் தேக்கவும் முடிவு செய்யப்பட்டது. கேரள அரசு இன்றைக்கு 1500 கோடியிலே புதிய அணை கட்ட இருப்பதாக அறிவிப்பு கொடுக்கிறது.

இதையும் படிங்க: கீழ்த்தரமான அரசியல் செய்யக்கூடாது... தமிழிசை சௌந்தரராஜனை விளாசிய நாராயணசாமி!!

ரூல் ஆஃப் கர்வ் என்ற விதிமுறை பயன்படுத்தி தன்னிச்சையாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீரை திறந்து விட்டுச்  சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருகின்றனர். ரூல் ஆஃப் கர்வ் விதிமுறைப் படி செப்.11 முதல் 20 வரை மட்டுமே நீர் மட்டுமே முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க வேண்டும். தற்போது 137.9 அடி மட்டுமே தேக்கி உள்ளது. கேரள அரசு பருவ மழை காலத்திலும், ரூல் ஆஃப் கர்வ் விதிமுறையை பின்பற்றவில்லை. தென் தமிழக விவசாயிகளின் வாழ்வாதமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையில் 142 தேக்க,  மாணவர்களின் சிற்றுண்டி திட்டத்தை துவங்க மதுரை வரும் முதல்வர் விவசாயம் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளிக்கு வழங்க மருந்துப் பற்றக்குறை நிலவி வருகிறது என்று தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios