Asianet News TamilAsianet News Tamil

இனி மதுரை வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணமில்லை... அமலுக்கு வந்தது அதிரடி உத்தரவு..!

மதுரை மாவட்டத்தில் 6 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 6 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. 27 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 3 சுங்கச்சாவடிகள் இருகின்றன. நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 

madurai prohibition on collecting tariffs in vandiyur tollgate
Author
Tamil Nadu, First Published Feb 28, 2020, 12:51 PM IST

மதுரை மாவட்டத்தில் 6 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. 60 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 6 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. 27 கிலோ மீட்டர் தூர இடைவெளியில் 3 சுங்கச்சாவடிகள் இருகின்றன. நீதிமன்ற உத்தரவை அடுத்து அங்கு சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வசதிகள் அனைத்தையும் செய்துத்தரும் வரை இந்தத் தடை இருக்கும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.madurai prohibition on collecting tariffs in vandiyur tollgate

மதுரை அருகே வண்டியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியானது, நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி இருப்பதாக புகார் எழுந்தது. 27 கிலோ மீட்டர் தூரத்தில் மூன்று சுங்கச்சாவடிகள் அமைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்கள் செல்ல தனி வழி போன்ற அடிப்படை இல்லை என்றும் கூறப்பட்டது. இது குறித்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்தனர்.madurai prohibition on collecting tariffs in vandiyur tollgate

இதன்படி, இன்று காலை 9 மணி முதல் வண்டியூர் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படாது. அடிப்படை வசதிகள் செய்துதரும் வரை கட்டணம் வசூலிக்க தடை இருக்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரையில் மாநில நெடுஞ்சாலையிலுள்ள வண்டியூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் வசூலிக்கத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வசதிகள் அனைத்தையும் செய்துத்தரும் வரை இந்தத் தடை இருக்கும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios