மதுரை வந்துள்ள பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டி போராடிய மதிமுகவினரை கைது செய்ய முயன்ற காவல்துறையினருடன் வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. 

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மதுமுகவினரைபோலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால், போலீசாருக்கும் மதிமுகவினருக்கு இடையே பெரிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன்பின் போலீசார் மதிமுகவினரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். 50 பேர் வரை போலீசார் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். ஆனால் வைகோ தனது ஆதரவாளர்களை இறக்கிவிடுமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘’ உடனே அவர்களை இறக்கிவிடுங்கள்’’ என்று அவர் போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அவர்களை இறக்கிவிட்டனர். இதையடுத்து மதிமுகவினர் மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில், புனரமைப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை முதல் மதுரை பெரியார் பேர்ந்து நிலையம் மூடப்பட இருக்கிறது. தற்காலிகமாக 9 இடங்களில் பேருந்து நிலையங்கள் திறக்கப்பட இருக்கின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கிழ் இந்தப் பேருந்து நிலையம் வர இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக 9 இடங்களில் மதுரையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட இருக்கின்றன அதன்படி, திருப்பரங்குன்றம் சாலையில் கேபிஎஸ் ஹோட்டல். குற்றப் பிரிவு அலுவலகம், மாலைமுரசு அலுவலகம், மேற்கு ரயில்வே கேட் அருகே மகபூப்பாளையம், எல்லீஸ் நகர், மீனாட்சி அம்மன் கோயில் பார்கிங், பழங்காநத்தத்தில் நடராஜ் தியேட்டர், திண்டுக்கல் சாலை, மேற்கு வெளி வீதி, ஹயாத்கான் சாஹிப் வீதி ஆகிய 9 இடங்களில் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்து நிலையங்களில் குடிநீர் வசதியும் மற்றும் சுகாதாரமான கழிப்பறை வசதிகள் தரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.