Asianet News Tamil

தனி ராஜ்ஜியம் நடத்தும் மதுரை மாநகராட்சி... AE பழனிச்சாமி சஸ்பெண்ட்... பளார் விட்ட நகராட்சி நிர்வாக ஆணையர்.!!

மதுரை மாநகராட்சியில் பல்வேறு சர்ச்சைகளுடன் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரைக்கும் கொடிகட்டி பறந்து வந்த உதவி பொறியாளர் (திட்டம்) பழனிச்சாமி 30.04.2020 அன்று பணி ஓய்வு பெற இருந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் அணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்

Madurai Municipal Corporation running separate state ... AE Palanisamy suspended ..
Author
Madurai, First Published Apr 29, 2020, 11:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

T.Balamurukan

மதுரை மாநகராட்சியில் பல்வேறு சர்ச்சைகளுடன் அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரைக்கும் கொடிகட்டி பறந்து வந்த உதவி பொறியாளர் (திட்டம்) பழனிச்சாமி 30.04.2020 அன்று பணி ஓய்வு பெற இருந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் ஆணையர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.இவரது சஸ்பெண்ட் மதுரை மாநகராட்சியில் பலருக்கும் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. இதே தேதியில் இன்னொருவரும் இவரைப்போன்றே பல்வேறு புகார்களோடு கொடிகட்டி பறக்கும் நபருக்கு சஸ்பெண்ட் கிடைக்குமா ?இல்லையா? என்று தெரியாமல் ஆவலோடு காத்திருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும்.

மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் பழனிச்சாமி சஸ்பெண்ட் குறித்து விசாரித்த போது பூதம் போல் கிளம்பிய விசயங்களில் சிலவற்றை குறிப்பிட்டுள்ளோம்.

பழனிச்சாமி உதவிசெயற்பொறியாளர் 23.03.1988 ம் ஆண்டு தேர்வாணையம் மூலம் தேர்வு ஆகாமல் நேரடி பணிநியமனத்தால் பில்டிங்இன்ஸ்பெக்டராக வேலைக்கு வந்தார்.அதன் பிறகு இவரது பணியை நிரத்தரம் செய்வதற்கு சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையர் கருத்துரு பெறாமலே பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்.
இவர் மதுரை வடக்கு மண்டலம், தெற்குமண்டலத்தில் பல ஆண்டுகளாக கோலோட்சி குறுநிலமன்னர் போல் ஆட்சி செய்து வரும் இவருக்கு மதுரையில் உள்ள எம்எல்ஏ, அமைச்சர்கள் ஆசி பரிபூரணமாக உண்டு. வடக்குமண்டல உதவி ஆணையராக இருந்த போது உதாரணத்துக்கு மூன்றுமாவடி அருகே இருக்கும் தாமரை அப்பார்ட்மெண்ட் இன்னும் பல கமர்சியல் இடங்களில்  வருவாய் இழப்புகள் ஏற்படுத்தியிருக்கிறார். இவர் வேலையே தள்ளாடும் போது இவர் போட்ட அப்பாயின்ட்மென்ட் எப்படி செல்லும் என்று தெரியவில்லை. அதற்கான சம்பளம் எப்படி யாரால் அனுமதிக்கப்படுகிறது என்கிற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.


தெற்கு மண்டலம். அக்ரினி அப்பார்ட்மெண்ட், முத்துப்பட்டி கண்மாய் புறம்போக்கு அதாவது சைட் அப்ரூவல் இல்லாமல் இருக்கும் 115 வீடுகளுக்கு அப்ரூவல் வழங்கியது. உதவி ஆணையர், டவுன் பிளான், உதவி டவுன் பிளான் அதிகாரி என மூன்று பணி இடங்களையும் இவரே பொறுப்பு பணியில் இருந்து கவனித்து வருகிறார். இது எந்த விதியில் இப்படி பணிசெய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதை ஆணையர் விளக்கினால் நன்றாக இருக்கும்.  2018-2019ம் ஆண்டு இவரால் வழங்கப்பட்ட எந்த பிளானுக்கும் தொழிலாளர் வைப்பு நிதி வாங்கவில்லை. இந்த தொகையை பிடித்தம் செய்து சென்னைக்கு அனுப்ப வேண்டும்.இதுவரைக்கு வாங்கப்படவில்லை.இதுவே பல கோடி வருவாய் இழப்பாம்.
மித்ரா ஆஸ்பிட்டல் அருகே அன்டர்கிரவுண்ட் கட்டுமானப்பணிகள் நடந்து முடிந்திருக்கிறது. இதற்கும் இவர்(பழனிச்சாமி)குடியிருக்கும் வேல்முருகன் நகரில் உள்ள வீடு இன்னும் பிளான் அப்ரூவல் வாங்கப்படவில்லை என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். போத்தீஸ் ,நரசிங்கம்பட்டி சென்டரல் மார்க்கெட்டில் உள்ள ஒரு பகுதி இடத்தை தனியாருக்கு விற்பனை செய்தது. என இவரது ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது குறிப்பிட்ட சில பதிவுகள் மட்டுமே பதிவு செய்திருக்கிறோம். இவரின் ஊழல்கள் மீண்டும் ஆவணங்களோடு பதிவாகும்.


இவர் பணியாற்றி இரண்டு மண்டலங்களிலும் தணிக்கை ஆய்வுகள் செய்யப்பட்டதில் திருப்தியில்லாமல் இருக்கிறார்கள் அதிகாரிகள்.காரணம் தணிக்கை செய்யும் அதிகாரிகள் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆகையால் தனியாக ஒரு ஸ்பெசல் டீம் போட்டு தணிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது மாநகராட்சி அதிகாரிகளின்  வேண்டுகோளாக அமைந்திருக்கிறது.
இவரின் சொந்த ஊரான நிலக்கோட்டையில் ஆரம்பித்து வாடிப்பட்டி வழியாக மதுரை, பின்னர் மதுரையில் இருந்து கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வரை இவரது சொத்துக்கள் நீண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையெல்லாம் வருமானவரித்துறை,  ஊழல்மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள் மாநகராட்சிக்குள் இவரைப்பற்றி நன்கறிந்த அதிகாரிகள். இவர் பணியாற்றிய இரண்டு மண்டலங்களிலும் என்னென்ன மாதிரியான ஊழல்கள், விதி மீறல்கள் செய்திருக்கிறார் என்பது பற்றி விரிவாக பின்னர் வெளியிடப்படும்.


மதுரை மாநகராட்சி மதுரையில் தனி ஆட்சி செய்து வருகிறது. மாநகராட்சிகளுக்கான அரசாணை 237 மதுரை மாநகராட்சி மதிப்பதே இல்லை. இங்கே தான் 21போலி உதவி பொறியாளர்கள் . போடாத ரோட்டுக்கு 1.5கோடி பணம் எடுத்தது. தெரு விளக்கில் ஆரம்பித்து அனைத்து வேலைகளிலும் ஊழல். உயிருடன் இருக்கும் எம்எல்ஏ டெல்லி முதல்வர் கெஸ்ரிவால் வரைக்கும் இறப்பு சான்றிதழ் வழங்கிய பெருமை இந்த மாநகராட்சிக்கு உண்டு. பட்டமே வாங்காதவர்கள் மாநகராட்சிக்கு சட்ட ஆலோசனை வழங்கும் அதிகாரிகளாக இங்கே தான் வலம் வருகிறார்கள். இங்குள்ள அதிகாரிகள் இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதற்கு என்ன காரணம் பொறுத்திருங்கள்...!! அவர்கள் யார் என்றெல்லாம் ஒவ்வொன்றாக பார்க்கலாம். சாட்டையை சுழற்றுவாரா மதுரை மாநகராட்சி கமிசனர் விசாகன்.!!?


 

Follow Us:
Download App:
  • android
  • ios