மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டதாக வெளியான தகவலையடுத்து மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக ரத்தினவேல் பணியமர்த்தப்படுவார் என தமிழக சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமஸ்கிருதத்தில் உறுதி மொழி
மதுரை மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கான வரவேற்பு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் கல்லூரி முதல்வர் டீன் ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றனர். இதனால் அந்த இடத்தில் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து
மருத்துவக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் HIPPOCRATIC உறுதிமொழியே பின்பற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் HIPPOCRATIC உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் இல்லையென தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்திற்கு வருத்தம்
இதனையடுத்து மதுரை மருத்துவ கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவ மாணவர்கள் விளக்கம் அளித்திருந்தனர். இந்த சம்பவத் தெரியாமல் நடைபெற்றதாகவும், இதில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு தொடர்பு இல்லையென தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் அளிக்கையில், மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்க்கப்ட்டதால் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த சம்வபம் தொடர்பாக ரத்தினவேல், தமிழக அரசுக்கு விளக்க கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார். ரத்தின வேல் நடைபெற்ற சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த காரணத்தாலும் மேலும் கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் அவர் சிறப்பாக பணியாற்றி உள்ளதாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி அவரை காத்திருப்பு பட்டியலில் இருந்து நீக்கி மீண்டும் மதுரை அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக பணி அமர்த்தப்படுவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
