Asianet News TamilAsianet News Tamil

நானும் மதுரைக்காரன் தாண்டா... சு.சாமி ஸ்டைலில் தெறிக்க விடும் நிர்மலா..!

வரும் மக்களை தேர்தலில் மதுரை தொகுதியை குறிவைத்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என கணக்குப்போட்டு காய் நகர்த்தி வருகிறார். 

madurai constituencies target Nirmala Sitharaman
Author
Tamil Nadu, First Published Dec 16, 2018, 4:57 PM IST

வரும் மக்களை தேர்தலில் மதுரை தொகுதியை குறிவைத்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அங்கு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என கணக்குப்போட்டு காய் நகர்த்தி வருகிறார். 

மற்ற மாநிலங்களைவிட, தமிழகத்தில் போட்டியிட பாஜகவின் முன்னணி தலைவர்கள் சிலர் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதில் முக்கியமானவர் ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அவர் பிறந்தது வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மதுரை பேச்சியம்மன்படித்துறை. இங்கிருந்து தான் இவரது குடும்பம், காவிரி ஆற்றங்கரையோரம், உள்ள ஸ்ரீரங்கத்துக்கு இடம் பெயர்ந்ததாம். பிறகு அங்கிருந்து வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வந்து டெல்லி அரசியலில் இப்போது பரபரப்பாக இருக்கிறார். madurai constituencies target Nirmala Sitharaman

தமிழகத்தில் அதிமுக-வுடன் கூட்டணி அமைந்தால், தனது பூர்வீகம் மதுரை என்று மலரும் நினைவுகளை சொல்லி இங்கு போட்டியிடலாம் என எண்ணுகிறார். ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து சுப்ரமணியசுவாமி, மதுரைக்கு வந்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து எம்பி தேர்தலில்  போட்டியிட்டார். madurai constituencies target Nirmala Sitharaman

அப்போது தனது பூர்வீகம் மதுரை அருகே சோழவந்தான் என்று சொல்லி... சொல்லியே ஓட்டு வாங்கி வெற்றி பெற்றதை நிர்மலா சீத்தாராமனின் காதுகளில் அடிக்கடி நினைவூட்டி வருகிறார்களாம் லோக்கல் பாஜக நிர்வாகிகள். ஆனால், நிர்மலா சீத்தாராமனோ தனது ஆசையை ‘சைலண்ட் மோடில் ’ வைத்து விட்டு, கூட்டணிக்காக காத்திருக்கிறார். அதே நேரம் மதுரை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேறு சிலரும் ஆர்வம் காட்டிட்டு வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios