madurai bose warning edappadi palanisamy
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் மதுரை மாவட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்வோம் என்று திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் எச்சரித்துள்ளார்.
தென் தமிழகத்தினுடைய மைய பகுதியில் 12 மாவட்டங்களான மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளது.
மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து எளிதில் வந்து சேரும் வண்ணம் விரிவான போக்குவரத்து வசதிகளும் அமையப் பெற்றுள்ளதால் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டிய அத்தியாவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் உதயக்குமார் நேற்று தெரிவித்த நிலையில் தமிழக அரசு தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு முதல்வரிடம் பரிந்துரைத்தார்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பதாக கூறிய அவர் இதற்காக பதவியை தியாகம் செய்யவும் தயங்க மாட்டேன் என்றும் அவர் எச்சரித்தார்.
இவரை தொடர்ந்து திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் தென் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்.
இதனால் 15 மாவட்ட மக்கள் பயன் பெறுவார்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் 240 ஏக்கர் மொத்தமாக உள்ள இடம் இதன் அருகிலேயே விமான நிலையம் ரயில்வே ஜங்சன் பஸ் போக்குவரத்து உள்ள இடம் மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் நான் பதவி விலகவும் தயங்க மாட்டேன் என எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே டாஸ்மாக் பிரச்சனை, தினகரன் அணி என பெரும்பான்மையை இழந்ததாக கூறப்படும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு நேற்று அமைச்சர் உதயக்குமாரின் ராஜினாமா மிரட்டல் நெருக்கடியை அடுத்து திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை விடுத்துள்ளது எடப்பாடி அரசுக்கு உச்சகட்ட நெருக்கடியை கொடுத்துள்ளது.
