Asianet News TamilAsianet News Tamil

மதுரை அன்பு முதுகில் குத்திய இரண்டு விஐபிக்கள்..! அதிமுகவின் உட்கட்சி கலாட்டா..!

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பெரும் முயற்சி மேற்கொண்ட பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்புக்கு மிகப் பெரிய ஏமாற்றமே கிடைத்தது.

madurai Anbu Chezhiyan
Author
Tamil Nadu, First Published Apr 26, 2019, 10:11 AM IST

திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட பெரும் முயற்சி மேற்கொண்ட பிரபல விநியோகஸ்தர் மதுரை அன்புக்கு மிகப் பெரிய ஏமாற்றமே கிடைத்தது.

மதுரையில் உள்ள அதிமுக பிரபலங்களுக்கு மிகப்பெரிய பைனான்சியல் சோர்ஸ் மதுரை அன்பு என்கிற கோபுரம் பிலிம்ஸ் அன்பழகன் தான். தமிழ் திரையுலகில் ஒரு தரப்பையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன் அன்பு என்கிற ஒரு பேச்சு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தீவிர திமுக அனுதாபியான இவர் ஜெயலலிதா காலம் முதலே தேர்தலில் போட்டியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார். madurai Anbu Chezhiyan

ஆனால் கந்துவட்டிக்காரர் கட்டப்பஞ்சாயத்து செய்பவர் என்பன போன்ற சில பிளாக் மார்க்ஸ் அன்பழகனுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை தடுத்து வந்தது. தற்போதைய அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு மதுரை அன்பு மிகவும் நெருக்கம். நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மதுரை அன்பு மீது நேரடியாக குற்றம் சாட்டப்பட்டது. madurai Anbu Chezhiyan

ஆனால் மதுரை அன்பை போலீசார் விசாரணைக்கு கூட அழைக்கவில்லை. இதற்கு காரணம் அமைச்சர் செல்லூர் ராஜூ உடனான நெருக்கமான நட்பு தான் என்று அப்போதே கிசுகிசுக்கப்பட்டது. மதுரை அன்பை இந்த வழக்கில் போலீசார் தேடி வந்ததாக கூறப்பட்ட நிலையிலும் கூட செல்லூர் ராஜூ வீட்டு திருமணத்தில் அவர் கெத்தாக கலந்துகொண்டு திரும்பினார். madurai Anbu Chezhiyan

இந்த அளவிற்கு செல்லூர் ராஜு உடன் நெருக்கமாக இருந்த மதுரை அன்புக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருடன் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இருந்தாலும் கூட திருப்பரங்குன்றம் தொகுதிகள் எப்படியும் இடைத்தேர்தலில் போட்டியிட்டு விடலாம் என்று செல்லூர் ராஜூ மூலம் காய் நகர்த்தினார் மதுரை அன்பு. ஆர்.பி. உதயகுமார் தரப்பிலிருந்து முட்டுக்கட்டைகள் போடப்பட்டு நிலையிலும் கூட நேர்காணலுக்கு அழைக்கும் அளவிற்கு மதுரை அன்புக்கு இந்த விவகாரத்தில் முன்னேற்றம் கிடைத்தது. madurai Anbu Chezhiyan

ஆனால் வேட்பாளர் பட்டியலில் மதுரை அன்பு பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார். இதுகுறித்து விசாரித்தபோது துவக்கத்தில் மதுரை அன்புக்கு சாதகமாக இருந்த செல்லூர் ராஜு பிறகு பின் வாங்கி விட்டதாக கூறுகிறார்கள். மதுரை அன்பு போன்ற பெரும் பண முதலையை கட்சியில் வளர விட்டால் நமக்கு ஆபத்து என்று ஆர்.பி. உதயகுமார் தரப்பிலிருந்து செல்லூர் ராஜு கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் காரணமாகத்தான் கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியலில் இருந்து மதுரை அன்பு பெயர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios