கனிமொழி திமுகவை சிறப்பாக வழி நடத்துவார் என போறபோக்கில் மதுரை ஆதீனம் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு சென்றதால் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மதுரை ஆதினம் மேலும் பேசியதாவது, தமிழ் மக்களின் மனம் கருணாநிதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கருணாநிதியின் தியாகத்தை தமிழ் சமுதாயம் எப்போதும் போற்றும். கருணாநிதியுடன் எத்தனையோ போராட்டங்களில் ஈடுபட்டுள்ளேன். அண்ணா காலம் தொட்டு இன்று வரை கருணாநிதியுடன் எனது நட்பு தொடர்ந்துகொண்டு இருக்கிறது. தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் தலைவர் கருணாநிதி என கூறினார்.

இதனையடுத்து பேசிய அவர்,  திமுக எனும் மாபெரும் இயக்கத்தை , மாபெரும் தொண்டர்களை கொண்ட இயக்கத்தை கனிமொழி முன்னின்று நடத்த வேண்டும் என்ற ஒரு குண்டை தூக்கிப்போட்டு விட்டு சென்றுள்ளார். 

கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு வந்த மதுரை ஆதீனம், அங்கு ஸ்டாலின், கனிமொழியுடன் நன்றாக பேசிவிட்டு வந்த அவர் இப்படி ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டு சென்றதால் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போதாது என, சீமானும், கனிமொழி அவர்கள் ஆளுமை திறன் மிக்கவர் களபணியாற்ற கூடியவர். அரசியல் வரலாறு தெரிந்தவர் இலக்கிய வாசிப்பு கொண்டவர் அந்த வகையில் கட்சி யை வழிநடத்தகூடியவர் பண்பு இருப்பதாக மதுரை ஆதினத்தின் கருத்தை வரவேற்கிறேன். கனிமொழியை இணைந்து கட்சி வழி நடத்துவது சிறந்தாக இருக்கும் என கொளுத்துத்திப் போட்டுவிட்டு சென்றுள்ளார்.

ஏற்கனவே, கருணாநிதி குடும்பத்தில் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ள இந்த சூழலில், கனிமொழியை உசுப்பேற்றி விட்டு சென்றுள்ளது. கருணாநிதியின் உடல்நலம் குன்றியிருக்கும் இந்த நேரத்தில் கவலையில் இருக்கும் ஸ்டாலின் குடும்பத்தில் இப்படி வந்து இவர்கள் சகுனி வேலை வார்த்துவிட்டு செல்லலாமா? என திமுகவினர் மதுரை   ஆதீனம் மற்றும் சீமானின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.