தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்தை உத்தரவு போல சித்தரிக்க முயன்ற ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிகக்கடுமையாக உள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரங்களின் விளைவாகத்தான் அதிகமானோருக்கு தொற்று பரவியிருக்கும். தேர்தல் ஆணையமே தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் சாடியிருந்தது.

கரூர் சட்டமன்ற தொகுதியில் 77 வேட்பளார்கள் போட்டியிடுவதால் 2 இடங்களுக்குப் பதிலாக 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்து தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

வாக்குப் பதிவு தினத்தன்று மட்டும்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறைப்படி நடந்ததே தவிர, பிரசாரத்தின்போது எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2ம் அலை பரவுவதற்கு தேர்தல் ஆணையம்தான் முக்கியக் காரணம் என நீதிபதிகள் கடுமையாகச் சாடினர்.

அரசியல் கட்சிகள், தங்களின் பொறுப்புகளை உணர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறைப்படி பின்பற்றவில்லை. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. முக கவசத்தை யாரும் அணியவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை என்று மிகக்கடுமையான கருத்தை தெரிவித்தது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிட நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்தது.

இந்த கருத்தை நீதிமன்றம் உத்தரவாக பிறப்பிக்கவில்லை. தேர்தல் ஆணையத்திற்கு கண்டனமாகத்தான் தெரிவித்திருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் கருத்தை, உத்தரவு என்று சிலர் மடைமாற்றம் செய்தனர். தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இயக்குவதாக குற்றம்சாட்டும் சக்திகள், உயர்நீதிமன்றத்தின் கருத்தை மேற்கு வங்க தேர்தலுடனும் தொடர்புபடுத்தி விமர்சிக்க தொடங்கினர்.

இந்நிலையில், அதுகுறித்து விளக்கமளித்து டுவிட்டரில் கொடுக்கப்பட்டுள்ள பதிலடியில், தேர்தல் ஆணையம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது கருத்துதானே தவிர, உத்தரவு பிறப்பிக்கவில்லை. ஆனால் உத்தரவுக்கும் கருத்துக்கும் வித்தியாசம் தெரியாத, உயர்நீதிமன்றத்தின் கருத்தை முழுவதுமாக படிக்காதவர்கள் தான் பிதற்றுகிறார்கள். 

Scroll to load tweet…

உயர்நீதிமன்றத்தின் 5 பக்க கருத்து பதிவில், எந்த இடத்திலும் கிரிமினல் வழக்கு பதிவு செய்வதாகவோ மே 2ம் தேதி நடக்கவுள்ள வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்படும் என்றோ தெரிவிக்கப்படவில்லை.

Scroll to load tweet…

சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கும் மேற்குவங்க தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கரூர் சட்டமன்ற தொகுதி தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றியிருக்க வேண்டும் என்றுதான் கூறியிருந்தது என்பதை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Scroll to load tweet…