ஓவரா ஆட்டம் போடும் சவுக்கு சங்கர்.. உயர் நீதி மன்றம் அடித்த ஆப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து பேச தடை.
அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைப் பற்றிய அவதூறு பேசும் சவுக்கு சங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவு வழங்கியுள்ளது
.
அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னைப் பற்றிய அவதூறு பேசும் சவுக்கு சங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவு வழங்கியுள்ளது.
முன்னாள் அரசு ஊழியர், ஊடகவியலாளராகவும், அரசியல் விமர்சகராகவும் அறியப்படுகிறார் சவுக்கு சங்கர். சவுக்கு என்ற பெயரில் இணையதளம் தொடங்கி தனக்கு எதிரான அரசின் அடக்குமுறைகளே எழுதத் தொடங்கிய அவர், அதன் பின்னர் அரசு மற்றும் அரசு தொடர்பான கருத்துக்களை வெளியிடுவது, அநீதிகளை இடித்துரைப்பதை நோக்கமாக வைத்து சவுக்கு இணையதளத்தை நடத்தி வருகிறார். தற்போது யூடியூப் சேனல்களில் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் புள்ளிகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் கருத்து கூறி வருகிறார். அவரின் கருத்துக்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களை குறிவைத்தே இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறீங்களா? எதை சொல்றீங்க? ஸ்டாலினை கிண்டல் செய்த நாராயணன் திருப்பதி!!
எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள் போன்றவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார், தனது கருத்துக்கள் மூலம் தமிழகத்தில் தனக்கென ரசிகர்களையும் உருவாக்கி வைத்துள்ளார் சவுக்கு சங்கர். பலரும் பேச அல்லது சொல்ல தயங்கும் விஷயங்களை சமூக வலைதளங்களில், யூடியூப் சேனல்களில் வெளிப்படையாகப் பேசி வருகிறார். குறிப்பாக ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தமிழக முதலமைச்சரின் உறவினர்கள் குறித்தும் அவர் பேசும் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்: “இனிமே இந்த கவலையில்லை.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ் சொன்ன ரயில்வே துறை !”
இந்த வரிசையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை குறிவைத்து அவர் பல கருத்துக்களை கூறி வருகிறார், அவரின் பெரும்பாலான கருத்துக்கள் ஆதாரமற்றவை என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது, இந்நிலையில் தன்னைப் பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் சவுக்கு சங்கர் கருத்து தெரிவித்து வருவதாகவும், எனவே அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் தனக்கு மான நஷ்டஈடாக 2 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடவும் செந்தில் பாலாஜி கோரியிருந்தார்.இந்நிலையில் இந்த மனுவை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்கையில் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட சவுக்கு சங்கருக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவிற்கு பதில் அளிக்குமாறு சவுக்கு சங்கருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார்.