திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தர விடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவாரூ இடைத்தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் பிரகாஷ் என்பவர் வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், திருவாரூரில் கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்ற்று வருகிறது. தேர்தல் நடைபெற்றால் அங்கு நிவாரணப்பணிகள் நிறுத்தப்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆகையால், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரிக்க வேண்டும்’ என அவர் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. எனவே இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமை, அல்லது திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  

திருவாரூர் இடைத்தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக நேற்றே நமது ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் ’ரத்தாகுமா திருவாரூர் இடைத்தேர்தல்..? இத்தனை காரணங்கள் இருக்கே..!’ என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தோம். இதனையடுத்து இன்று திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி முறையீடு வழக்கு தொடரப்பட்டுள்ளது.