"மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். அவருக்கு வயது (85). மூச்சுத்திணறல், சிறுநீரக கோளாறு காரணமாக லால்ஜி டாண்டன் லக்கௌவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் இன்று காலமானார். இதனை அவரது மகன் அசுதோஷ் டாண்டன் டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். உ.பி.,யின் லக்னௌவைச் சேர்ந்த பாஜகவின் லால்ஜி தாண்டன் எம்பியாகவும், பிகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.