Asianet News TamilAsianet News Tamil

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு நாங்க ரெடி... ஆளுநரிடம் கடிதம் கொடுத்து அமித்ஷாவை அலறவிடும் கமல்நாத்..!

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அம்மாநில முதல்வர் கமல்நாத் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக இணைந்தார். இதனையடுத்து, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் ஜாலியாக இருந்து வருகின்றனர். 

Madhya Pradesh crisis... cm Kamal Nath calls on governor
Author
Madhya Pradesh, First Published Mar 13, 2020, 5:04 PM IST

மத்திய பிரதேசத்தில் பெரும் அரசியல் குழப்பத்திற்கு இடையே வரும் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராக இருப்பதாக முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார். 

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அம்மாநில முதல்வர் கமல்நாத் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக இணைந்தார். இதனையடுத்து, அவரது ஆதரவாளர்களான 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் ஜாலியாக இருந்து வருகின்றனர். 

Madhya Pradesh crisis... cm Kamal Nath calls on governor

இதனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மைனாரிட்டி அரசாக இருந்து வருகிறது. இதனிடையே, வரும் 16-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக கூறியுள்ளது. ஆனால், முதல்வர் கமல்நாத் கூறுகையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Madhya Pradesh crisis... cm Kamal Nath calls on governor

இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத் இன்று ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் டாண்டனை சந்தித்து கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தின் நகலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களுக்கு வெளியிட்டார். அதில், பாஜக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேரை பிடித்து வைத்துக் கொண்டிருப்பதாகவும் கமல்நாத் கூறியிருந்தார். மேலும் பெங்களூரில் சிறைவைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விடுவிப்பதை உறுதி செய்ய, ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்துமாறும் கமல்நாத் கோரிக்கை வைத்துள்ளார். மார்ச் 16-ம் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தயாராக இருப்பதாகவும் கமல்நாத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios