செந்தில் பாலாஜிக்கு 3 இடங்களில் கிரிட்டிக்கல் பிளாக்.! நாளை அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை..! மா.சுப்பிரமணியன்

இருதய பகுதியில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நாளை அதிகாலை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

Ma Subramanian said that Senthil Balaji will undergo surgery tomorrow morning

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கஇல் 2 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டதில் 3 இடங்களில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

Ma Subramanian said that Senthil Balaji will undergo surgery tomorrow morning

இருதய பகுதில் 3 அடைப்பு

இந்தநிலையில் தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவதற்கு முன் கூட்டி நடைபெற வேண்டிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செந்தில் பாலாஜிக்கு 3 பிரதான ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. க்ரிட்டிக்கல் பிளாக் என்று சொல்லப்படுகின்ற வகையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் பரிசோதனைகள் தெரிய வந்ததைய டுத்து தற்போது மேல் சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

Ma Subramanian said that Senthil Balaji will undergo surgery tomorrow morning

நாளை காலை அறுவை சிகிச்சை

முன்னதாக அவரது உயிரை காப்பாற்றும் வகையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் பிளட் தின்னர் என்கின்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை சிகிச்சை முடிந்த பிறகு தான் அடுத்த கட்ட சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக அறுவை சிகிச்சையை நான்கு ஐந்து நாட்களுக்கு தள்ளி வைத்தார்கள். நாளை அதிகாலை அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. அறுவை சிகிச்சை செய்வது உண்டான உடல் தகுதியே செந்தில் பாலாஜி பெற்றிருப்பதாக காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கும் அறுவை சிகிச்சைக்கும் சம்பந்தமில்லை உடனடியாக அறுவை சிகிச்சை  செய்ய வேண்டும் என்பதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

Ma Subramanian said that Senthil Balaji will undergo surgery tomorrow morning

அமலாக்கத்துறை சந்தேகம் ஏன்.?

இந்த விஷயத்தை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். இதுவரை அவருக்கு மூன்று பிளாக் அதுவும் க்ரிட்டிக்கல் ஆன அடைப்பு ஏற்பட்டுள்ளது அவர் தெரியாமல் இருந்துள்ளார். அமலாக்கத்துறை சந்தேகப்படுவது ஒட்டுமொத்த மருத்துவ துறை மீதும் சந்தேகப்படுவதற்கு சமம். நாளை அரிசி செய்த பிறகு அமலாக்கத்துறை என்ன செய்வார்கள் என தெரியவில்லை என கூறினார். ஒரு வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ள ஒருவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வாரா என்பதை அமலாக்கத்துறை தான் கூற வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

 இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் சிக்கல்.. என்ன காரணம் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios