Asianet News TamilAsianet News Tamil

அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல் நிலை எப்படி உள்ளது.? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை முடிந்து ரெகுலர் ரூமுக்கு வந்துள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Ma Subramanian said that he is monitoring the physical condition of Senthil Balaji after the surgery
Author
First Published Jun 27, 2023, 8:55 AM IST

8 கி.மீட்டர் நடை பாதை

கோவை பந்தய சாலையில் 8 கிலோமீட்டர் தூரம் நடை பயிற்சியினை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் மேற்கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருகிறார். 38 வருவாய் மாவட்டத்தில் எட்டு கிலோமீட்டர் நடை பாதையை அமைத்து மரம், இருக்கை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக கூறினார். . ஜப்பான் டோக்கியோ சென்ற போது 8 கிலோமீட்டர் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் தினம் தோறும் பத்தாயிரம் நடைபாதைகள் நடந்தால் உடல் சீராக இருக்கும் என தெரிவித்தார். 

Ma Subramanian said that he is monitoring the physical condition of Senthil Balaji after the surgery

செந்தில் பாலாஜியின் உடல்நிலை

இதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் 8 கிலோமீட்டர் பாதையை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. கடந்த வாரம் மதுரையில் எட்டு கிலோ மீட்டர் நடைபாதை இறுதி செய்யப்பட்டது. மக்கள் நல்வாழ்வு துறையை சேர்ந்த மாவட்ட அலுவலர்கள் மாநகராட்சி ஆணையாளர் பாதையை தேர்வு செய்து பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது என குறிப்பிட்டார்.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,  செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சைக்கு பின்னர் நேற்று முன்தினம் ரெகுலர் ரூம் என்ற அடிப்படையில் ரூமுக்கு வந்துள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். கோவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  அம்மன் அர்ஜுனன் கோவை அரசு மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அங்கு செல்ல உள்ளோம். நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மூன்று திட்டங்கள் இன்று. செயல்படுத்த உள்ளதாக தெரிவிதார்.

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியை சுத்துபோட நினைத்த அமலாக்கத்துறை? செக் வைக்கும் நீதிமன்றம்? இன்று முக்கிய விசாரணை

Follow Us:
Download App:
  • android
  • ios