கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி விரைந்து குணமடைய விரும்புவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. ஸ்ரீபெரும்புதூர் அதுமுக எம்.எல்.ஏ. பழனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்எல்ஏ பழனி விரைந்து நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் மூலம் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்று உறுதியான அதிமுக எல்.எல்.ஏ. பழனி முழுமையாக நலமடைய வேண்டும்.எல்.எல்.ஏ. பழனி நலமடைந்து மக்கள் பணியாற்ற வர வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். பொதுப்பணியில் இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்” என்று மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இந்நிலையில் இரண்டாவது எம்.எல்.ஏ.வாக அதிமுக எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டுள்ளார்.