Asianet News TamilAsianet News Tamil

சாத்தான்குளம் விவகாரம்.. எப்படித்தான் இப்படி அமைதியா இருக்கீங்களோ... எடப்பாடியார் மீது மு.க. ஸ்டாலின் அட்டாக்!

“@CMOTamilnadu  நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக  கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?"
 

M.K.Stalin attacked Edappadi Palanisamy
Author
Chennai, First Published Jun 30, 2020, 10:01 PM IST

சாத்தான்குளம் விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக  கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

M.K.Stalin attacked Edappadi Palanisamy
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

M.K.Stalin attacked Edappadi Palanisamy
இந்த விவகாரத்தில் தலையிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தாமாக முன் வந்து விசாரித்துவருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதித்துறை நடுவரை அறிக்கை தாக்கல் செய்யும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதை விசாரிக்க சென்ற நீதிபதியை போலீஸார் ஒருவர் ‘உன்னால் ஒரு ....... புடுங்க முடியாது’ என்று பேசியதாகவும், போலீஸ் உயரதிகாரிகள் உடல் பலத்தைக் காட்டும் வகையில் நடந்துகொண்டதாகவும் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தை கடுமையாக அணுகிவரும் நீதிமன்றம், உயிரிழந்த ஜெயராஜ் - பெனிக்ஸ் ஆகியோர் உடல்களில் அதிகளவில் காயங்கள் இருந்ததாக மருத்துவ பரிசோதனை தெரிவிப்பதால், போலீஸார் மீது கொலை வழக்குப்பதி செய்ய முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தது.

M.K.Stalin attacked Edappadi Palanisamy
எனவே, ஜெயராஜ் - பெனிக்ஸ் ஆகியோரை  தாக்கிய போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இ ந் நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் கருத்திட்டுள்ளார். அதில், “@CMOTamilnadu  நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக  கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்?

.

காவல்துறைத் தலைமையாக, இருக்கும் @CMOTamilNadu இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும்,விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது  நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி செயல்படும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?” என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios