திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது என்னை கட்சியில் இணைப்பதற்கு சிலர் தடுத்து வந்தனர். மேலும் தற்போது கருணாநிதி இல்லாததால் கட்சியைப் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என மு.க. அழகிரி பேட்டியளித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது என்னை கட்சியில் இணைப்பதற்கு சிலர் தடுத்து வந்தனர். மேலும் தற்போது கருணாநிதி இல்லாததால் கட்சியைப் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என மு.க. அழகிரி பேட்டியளித்துள்ளார். திமுகவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் போட்டியிட நேற்று வேட்புமனுத்தாக்கல் செய்தனர். ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் எதிராக யாரும் மனுதாக்கல் செய்யவில்லை என்பதால் அவர்கள் பொதுக்குழுவில் ஒருமனதாக நாளை தேர்வு செய்யப்பட உள்ளனர். 

இந்நிலையில் அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனிடையே செப்டம்பர் 5-ம் தேதி பேரணி நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். பேரணி நடத்துவதாக தொடர்பாக 4-வது நாளாக தனது நிர்வாகிகளுடன் ஆலோசித்து வருகிறார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தமது தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற இருப்பதாக தெரிவித்தார்.

கலைஞர் உயிருடன் இருந்தபோது, தம்மை தி.மு.க சேர்த்துக் கொள்வதாக கூறியதாகவும், ஆனால் அதை சிலர் தடுத்துள்ளதாகவும் அழகிரி கூறினார். கருணாநிதி இல்லாததால் கட்சியைப் காப்பாற்ற முடிவெடுத்துள்ளேன். எங்களை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இப்போது கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக கட்சி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதை காப்பாற்றும் எண்ணத்தில் அவர்களிடம் என்னை கட்சியில் சேர்க்க சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை, ஆகையால் தாம் களமிறங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.